dc.description.abstract |
இலங்கையில் சமகால அரசியலில் அதிகம் உச்சரிக்கப்படுகின்ற ஒரு விடயமாக நல்லாட்சி என்னும் பதம் மாறியிருக்கின்றது. தேசிய அரசாங்கம் ஆட்சி புரிகின்ற இக்கால கட்டத்தில், நல்லாட்சி பற்றிய சிறந்த புரிதலைப் பெற்றுக்கொள்வது அவசியமானதாகும். இதனடிப்படையில், நல்லாட்சி என்றால் என்ன? என்பதனைக் கோட்பாட்டு ரீதியில் விளங்கிக்கொள்வது அவசியமானதாகும். இக்கோட்பாட்டின் அடிப்படையில், நடைமுறையில் உள்ள அரசாங்கத்தினை நல்லாட்சி அரசாங்கமாக மதிப்பீடு செய்ய முடியுமா? என்பதனை ஆய்வுப் பிரச்சினையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வானது பண்புசார் ஆய்வு முறையியல் அணுகுமுறையினை அடிப்படையாகக் கொண்டது. இப்பண்புசார் தகவல்கள் இரண்டாம் நிலைத் தரவு மூலங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன. குறித்த தரவுகள் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டு ஆய்வின் முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவானது, நடைமுறையில் உள்ள தேசிய அரசாங்கத்தினை நல்லாட்சி அரசாங்கமாகக் குறிப்பிடுவது கேள்விக்குரியதாகும் என்பதனை வலியுறுத்துகின்றன. எவ்வாறாயினும், கடந்த கால ஆட்சியுடன் ஒப்பிடும் போது நல்லாட்சிப் பண்புகள் சில நடைமுறைப்படுத்தப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது மறுப்பதற்கில்லை. இதனடிப்படையில் இத்தேசிய அரசாங்கத்தினை நல்லாட்சி அரசாங்கம் என்பதனைவிட நல்லாட்சி நோக்கிப் பயணிக்க எத்தனிக்கின்ற அரசாங்கமென்று கூறுவதே பொருத்தமானதாகும் என்பது இவ்வாய்வின் முடிவாகும். |
en_US |