dc.description.abstract |
கிழக்கிலங்கையில் புகழ் பெற்ற பழம்பெரும் கோயில்களில் ஒன்றாக உகந்தை முருகன் ஆலயம் கதிர்காமத்திற்கு அடுத்தபடியாக சிங்கள தமிழ் மக்களின் வழிபாட்டுத்தலமாக மிளிர்கின்றது. ஆலயங்களின் இருப்பிடங்கள் இயற்கைச் சூழலை மையமாகக் கொண்டு காணப்படுகின்றது. இவ்வாலயமானது நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை முதலிய இயற்கை நிலங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. மன அமைதியின் ஓருமைப்பாட்டிற்கு இயற்கைச் சூழல் அவசியமாகின்றது. பல்சமய கலாசாரம் கொண்ட இலங்கைச் சமூகத்தினரிடையே வழிபாட்டு ரீதியில் இரு இன மக்களை ஒன்றிணைக்கின்றது. இயற்கைச் சூழலில் உகந்தை முருகன் ஆலயத்திற்குள்ள சிறப்பினையும் ஆலயமானது மக்களது வாழ்வில் பெறுகின்ற முக்கியத்துவத்தை எடுத்தியம்புவதாக இவ்வாய்வு அமைகின்றது. இயற்கையில் கிடைக்கும் பொருட்கள் பூஜைக்குப் பயன்படுத்தப்பட்டு அவை புனிதப் பொருட்களாகவும் நோக்கப்படுகின்றன. இயற்கைச் சூழலில் உகந்தை முருகன் ஆலயமென்ற இவ்வாய்வுக் கட்டுரையானது பகுப்பாய்வாக அமைந்துள்ளது. களஆய்வு, நேர்காணல்கள் என்பவற்றை முதல்நிலைத் தரவுகளாகக் கொண்டும் ஏனைய நூல்கள், கட்டுரைகள், இணையத்தள தகவல்களை இரண்டாம்நிலைத் தரவுகளாகக்கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. |
en_US |