dc.description.abstract |
திருமணத்தை மிகப் புனிதமான ஓர் ஒப்பந்தமாக இஸ்லாம் கருதுவதோடு இஸ்லாமிய சமூக அமைப்பில் அதற்கு பிரதான இடமும் வழங்கப்;பட்டுள்ளது. மனித வாழ்வின் அனைத்து விடயங்களுக்கும் மிகவும் நுணுக்கமாக வழிகாட்டியுள்ள இஸ்லாம் திருமண விடயத்திலும் அதிக அக்கறை செலுத்தியுள்ளது. அந்த வகையில் ஒரு முஸ்லிம் திருமணம் முடிக்க எண்ணி பெண் பார்ப்பதிலிருந்து இறுதி வரைக்கும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற முழுமையான வழிகாட்டல்களை அது வழங்கியுள்ளது. ஆண், பெண் இருபாலாரும் தமது வாழ்க்கைத் துணையை சரியாகத் தெரிவு செய்து கொள்வதில்தான் இல்லற வாழ்வின் வெற்றி தங்கியுள்ளது. ஓர் ஆணோ, பெண்ணோ தனக்குரிய துணையைத் தெரிவு செய்யும் போது நடைமுறையில் கவனத்திற் கொள்ளும் பல அம்சங்கள் காணப்படுகின்றன. அவை பணம், பதவி, குலம், கோத்திரம், அழகு போன்;றவைகளாகும். திருமணத்தின் போது மணமக்களைத் தெரிவு செய்வதற்குரிய இஸ்லாத்தின் வழிகாட்டுதல்களைத் தெளிவுபடுத்துவதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். முதலாம் நிலைத்தரவுகள் காழி நீதிபதி, இணக்க சபை உறுப்பினர்கள், பள்ளிவாயல் நிர்வாகிகள் போன்றோரிடம் நேர்காணல் மூலமாகப் பெறப்பட்டுள்ளதோடு இரண்டாம் நிலைத் தரவுகளாக நூல்கள், கட்டுரைகள், இணையத்தளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வு அல்குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்டுள்ளதால் பண்புசார் பகுப்பாய்வு பிரயோகிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் மணமக்களைத் தெரிவு செய்வதற்கு வழங்கியுள்ள வழிகாட்டல்களும் பரிந்துரைகளும் மணவாழ்க்கையில் சந்தோஷமும் புரிந்துணர்வும் ஏற்படுவதற்கு வழிவகுப்பதோடு துணையோடு திருப்தியுறாமல் விவாகரத்துகள் ஏற்படுவதையும் தடுக்கிறது. திருமணம் செய்வதற்கு துணையைத் தெரிவு செய்பவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் இது தெளிவை ஏற்படுத்துவதோடு இத்தலைப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கும் இது வழிகாட்டியாக அமையும். |
en_US |