Abstract:
'உத்தியாக்கள் சடங்குகள் தொடர்பான இனவரைவியல் ஆய்வு' என்பது இவ்வாய்வின் தலைப்பாகும்.
இத் தலைப்பின் கீழ் வேட வழிவந்த வேடவேளாளர்களும் அவர்களது தெய்வங்களும், வழிபாட்டு
முறைகளும் ஆராயப்படுவதோடு மிக்சிறப்பாக உத்தியாக்கள் சடங்கும் அதன் வழிபாடும், அதன்
சமூகப்பண்பாட்டு அழகியல் அம்சங்களும் ஆராயப்படுகின்றன. மட்டக்களப்பு பண்பாட்டோட்டத்தில்,
வாழ்ந்துக்கொண்டிருக்கும் பின்தங்கிய இனக்குழும மக்கள் பற்றிய ஆய்வுகள் மிகக் குறைவு.
இத ;தகையப் பிரிவினர் இன்று இனக்குழும மக்கள் பற்றிய கல்வியிலும் (Subalterns studies)
இனவரைவியல் கல்வியிலும் (Ethnographical stud) முக்கிய இடத்தைப் பெறுகின்றனர். இத்தகைய
காரணங்களைக் கருத ;திற் கொண்டு இதில் ஒரு பகுதியினராக இருக்கின்ற வேடர் வழிவந்த
வேடவேளாளர்களும், அவர்களது சடங்கு நிலை வழிபாட்டு முறைகளுள் ஒன்றான உத்தியாக்கள்
சடங்கும் அதன் சமூக பண்பாட்டு அழகியல் அம்சங்களும் இனவரைவியல் பின்னணிக்கூடாக
வெளிக்கொணரப்பட்டுள்ளது. வேடவேளாளர் எனப்படுகின்ற இனக்குழு, சமூகத்தில் வேடுவர் என
அழைக்கும் மரபும் உண்டு. குமார தெய்வமும் அதன் பல கிளைத் தெய்வங்களும், கன்னிமாரும்,
உத்தியாக்களும் இடம் பெறுகின்ற போதும் இவ்ஆய்வு 'உத்தியாக்களின் சடங்கு மரபை' மாத்திரம்
ஆராய்கிறது. மட்டக்களப்பு பண்பாட்டோட்டத்தில், வேடவேளார் மத்தியில் நிலவும் உத்தியாக்கள்
சடங்கு வழிபாடு வேடப்பரம்பரையின் ஊடாக வந்தது. இவை பூர்வீக வணக்கமுறையின் பண்பைக்
கொண்டவை. இறந்தவர்களை, கோயில் சடங்கில் வழிபாடு செய்வது மட்டக்களப்பு
பண்பாட்டோட்டத்தில் முக்கியமான விடயமாகும். இதனை மட்டக்களப்பில் வேறு எந்தச் சடங்கிலும்
காணமுடியாது