dc.description.abstract |
போதிலும், யாழ். மறைமாவட்டத்தின் கத்தோலிக்க திரு அவையை
நோக்குகின்றபோது ஒரு திருப்தியற்ற நிலையையே உணரமுடிகிறது. இருந்தும்
திருவழிபாடு, மறைக்கல்வி, மறைபணி போன்றவற்றின் வரம்புகளுக்கப்பால் இன்னும்
செல்லவில்லை. எதிர்பார்க்கப்இரண்டாம் வத்திக்கான் சங்கம் திரு அவையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள
பட்ட ஆழமான மனமாற்றத்தை நம்மில் ஏற்படுத்தும்
வகையிலான சூழல் நம்மிடையே இன்னும் உருவாகவில்லை.
பொதுநிலையினரிடமிருந்து பணிக்காகத் தெரியப்பெற்று, திருநிலைப்படுத்தப்பட்ட
பணியாளர்கள், பொதுநிலையினருக்கு பணிபுரியவே இறைவனால்
அழைக்கப்பட்டுள்ளனர். ஆயினும், நமது தளத்திரு அவையில் அவர்களது பணிபுரியும்
மனநிலை குறைவாகவேயுள்ளது. உதாரணமாக: பொதுநிலையினருக்குப்
பொறுப்புக்கள் சீரான வகையில் பகிரப்படுத்தப்படாமையினால், மேய்ப்புப்பணி
நிர்வாகத்தில் அவர்கள் ஈடுபடுவதுமில்லை, ஈடுபடுத்தப்படுவதுமில்லை.
பொதுநிலையினருக்கும் குருக்களுக்கும் இடையிலான தொடர்பு குறைவாகவே
உள்ளது. பொதுநிலையினர் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகளையும்
கடமைகளையும் முழுமையாக ஏற்றுச் செயற்படுவதில்லை. அந்த வகையில்
இன்றைய திரு அவை தனது புதிய நோக்கில், யாழ். மறைமாவட்டத் தளத்திரு
அவையைப் புதுப்பித்து ஆழப்படுத்தவே, ஆவியானவர் நம்மை இறைவார்த்தைக்கு
அழைத்துச்சென்று இன்றைய வாழ்வு, வழிபாடு என்பனவற்றை மீளச்சிந்திக்க நாம்
அழைக்கப்படுகின்றோம்.
ஆய்வின் நோக்கம்: கத்தோலிக்க திரு அவையில் பொதுநிலையினர் பற்றிய
நிலைப்பாட்டை இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் பின்னரான யாழ்ப்பாண
மறைமாவட்டத்தை மையமாக வைத்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. |
en_US |