[21:47, 13/03/2024] It's Me: அரெ முருகானந்தன் ஈழத்துச் சிறுகதை ஆசிரியர்களில் முக்கியமான எழுத்தாளராவார். இவ் ஆய்வானது அசெ முருகானந்தனது சிறுகதைகளை உள்ளடக்கரீதியிலும், சிறுகதைகளில் கையாளப்பட்டுள்ள உத்திமுறைகளின் அடிப்படையிலும் விரிவாக ஆராய்கின்றது ஈழத்துச் சிறுகதை வளரச்சியில் மக்களின் வாழ்வை யதார்த்தபூர்வமாக வெளிப்படுத்தும் சிறுகதைகளாக இவரின் சிறுகதைகள் எங்கனம் அமைகின்றன என்பது பற்றியும் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் அசெ.முருகானந்தனின் பங்களிப்பு மற்றும் அவரின் சிறுகதைகள் பெறும் முக்கியத்துவம் என்பது குறித்து மதிப்பிடுவதும் ஆய்வின் நோக்கங்கள் ஆகும். அசெ முருகானந்தனது அனைத்துச் சிறுகதைகளும் கிடைக்கப்பெறாமை இவ்வாய்வில் எதிர்கொண்ட சவால் ஆகும்இருப்பினும்,அ.செ.முருகாலந்தனது நூல்களில் வெளிவந்த சிறுகதைகளை மட்டும் இவ்வாய்விற்கு எடுத்துக்கொண்டு, செ.முருகானந்தனது சிறுகதைகள் வெளிவந்த நூல்களை முதல்நிலைத்தரவாகவும் அவர் தொடர்பாக சஞ்சிகைகள், பிறநூல்களில் வெளிவந்த கட்டுரைகளை இரண்டாம் நிலைத்தரவாகவும் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. அசெ முருகானந்தனின் சிறுகதைகளை விரிவாக ஆய்வுக்கு உட்படுத்தி அவரது சிறுகதைகளில் தனித்துவத்தை வெளிக்கொணர்வதாக இவ்வாய்வு அமைகின்றது.
திறவுச் சொற்கள் அசெ.முருகானந்தன் இலங்கைத் தமிழ்ச் சிறுகதை சிறுகதை உத்திகள், மறுமலர்ச்சிக்
ஆய்வு அறிமுகம்
[21:50, 13/03/2024] It's Me: Abstracts of Proceedings of the Fifth Annual Research Session-2023 (ARS-2023) of the Faculty of Arts & Culture, Eastern University, Sri Lanka
பேராசிரியர் செ.யோகராசாவின் ஈழத்து நவீன தமிழ் இலக்கியங்கள் தொடர்பான ஆய்வுகள் - ஓர் மதிப்பீடு
அமிர்தலிங்கம் அனிதா, நதிரா மரியசந்தனம்
தமிழ்க் கற்கைகள் துறை, கலை கலாசார பீடம்.
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
[email protected]
ஆய்வுச் சுருக்கம்
ஈழத்துக் கல்லிப் புலத்திலும் இலக்கியப் புலத்திலும் நன்கறியப்பட்ட பன்முக ஆளுமை கொண்டவராகத் திகழும் செ.யோகராசா ஈழத்து நவீன தமிழ் இலக்கியங்கள் பற்றி மேற்கொண்ட ஆய்வுகள் தனித்துவமுடையனவாகவும் முக்கியத்துவம் உடையனவாகவும் அமைகின்றன. செ.யோகராசா ஈழத்து நவீன தமிழிலக்கியம் பற்றி மேற்கொண்ட ஆய்வுகள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. ஈழத்து நவீன தமிழிலக்கியம் பற்றிய இவருடைய ஆய்வுகளை வெளிக்கொணர்தல் இவ்வாய்வின் முக்கியத்துவமாக அமைந்துள்ளது. ஆரம்ப காலத்தில் படைப்பிலக்கியகர்த்தாவாக அறிமுகமாகிய இவர் எழுதிய சிறுகதைகளும் கவிதைகளும் அவரது இலக்கியப் படைப்பாளுமையை வெளிப்படுத்தின செ.யோகராசாவின் பன்முக ஆளுமை அவர் எழுதிய நூல்கள், சிறு பிரசுரங்கள், கட்டுரைகள், மேடைப்பேச்சுக்கள், நேர்காணல்கள், உரையாடல்கள் வழியே வெளிப்படுகின்றன. கவிதை, புனைகதை உள்ளிட்ட நவீன இலக்கியம், பெண்கள் இலக்கியம், புகலிட இலக்கியம், ஈழத்து இலக்கியங்கள், சிறுவர் இலக்கியம், நாட்டார் இலக்கியம், வாய்மொழி இலக்கியம், திறனாய்வு என்பவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவராகவும், இவை குறித்த படைப்புக்களைத் தேடுவதிலும், ஆராய்வதிலும், திறனாய்வு செய்வதிலும் தொடர்ந்து ஈடுபட்டுவருபவராகவும் விளங்குகின்றார். எனவே, ஈழத்து நவீன தமிழ் இலக்கியங்கள் தொடர்பான அவரது ஆய்வுகளை மதிப்பீடு செய்வது ஈழத்துத் தமிழிலக்கிய வளர்ச்சியில் அவரது ஆய்வுகளின் முக்கியத்துவத்தை வெளிக்கொண்டுவருவதற்கு அவசியமானதாகும். இதுவரையில் செ.யோகராசா ஈழத்து நவீன தமிழ் இலக்கியம் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வுகள் பற்றிய முழுமையான மதிப்பீடுகள் இடம்பெறவில்லை. அவ்வகையில், இவ்வாய்வானது அவரது ஈழத்து நவீன தமிழிலககிய ஆய்வுகள் பற்றிய முழுமையான மதிப்பீட்டாய்வாக அமைகின்றது