dc.description.abstract |
சுதந்திர இலங்கையில் அரசியலமைப்பாக்கம் என்பது அடிக்கடி நடைபெறுகின்றதொரு விடயமாகும். இந்த வகையில் புதிய நல்லாட்சி அரசாங்கத்தின் நூறு நாள் திட்டத்தின் ஒரு பகுதியாக இன முரண்பாட்டை தீர்ப்பதற்காக புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதென்பது தேர்தல் கால வாக்குறுதியாக இருந்தது. இதற்கமைய 2015இல் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் 2016 இல் அதற்கான முயற்சிகளை மேற்க்கொண்டது. சுமார் பதினெட்டுமாத கால முயற்சியின் பின்னர் 2017 நவம்பர் மாதத்தில்; இடைக்கால அறிக்கை ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. வரையப்படவிருக்கும் புதிய அரசியலமைப்பில் இந்த இடைக்கால அறிக்கை ஏற்படுத்தப்போகும் தாக்கம் எவ்விதம் அமையப்போகின்றது என்பதை இவ்வாய்வு விளக்குகின்றது. இதற்காக அறிக்கையிலுள்ள முக்கிய பன்னிரெண்டு விடயங்கள் ஆய்வு செய்யப்பட்டு கருத்துரைக்கப்பட்டுள்ளது. “வழிப்படுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை அமையவிருக்கும் புதிய அரசியலமைப்புக்கு முன்னோடியானது.” எனும் கருதுகோளின் கீழ் அமைந்துள்ள இவ்வாய்வு ஒரு மேசை ஆய்வாகவே (னுநளம சுநளநயசஉh) அமைந்துள்ளது. உத்தேச அரசிலமைப்பு சம்பந்தமான பிரசுரங்கள் ஆய்வு மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் மற்றும் கருத்தரங்குகளி;ல் வளவாளராகவும் பார்வையாளராகவும் பங்குகொண்டு பெற்றுக் கொண்ட தகவல்கள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் இவ்வாய்வு மேற்க்கொள்ளப்பட்டது.
திறவுச்சொற்கள் : அரசியலமைப்பு, ஆட்சித்துறை, இரண்டாம் மன்றம், தேசியக் கொள்கை, நிறைவேற்றதிகாரம், திரட்டு நிதி. |
en_US |