dc.description.abstract |
சனத்தொகையில் அரைப்பங்கினரை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பெண்களின் பங்களிப்பு இன்றி தீர்மானம் மேற்கொள்வதும், அதனை நடைமுறைப்படுத்துவதும் ஜனநாயகம் ஆகாது. உண்மையில், சமகால இலங்கை அரசியலின் நிலையும் இதுவே. இவ்விடயம் தொடர்பில் இரு தசாப்தங்களுக்கு முன்னர் உலகநாடுகளின் அனுபவமும் ஏறக்குறைய இவ்வாறனதாகவே இருந்தது. ஆயினும் பல நாடுகள் விழித்துக்கொண்டன. துரிதமாகச் செயற்பட்டன. அதனடிப்படையில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தும் கொண்டன. ஆயினும், இலங்கையில் இம்மாற்றம் ஏற்படவில்லை. இப்பின்னணியில், பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில், உலக நாடுகள் எத்தகைய வழிமுறைகளைக் கையாண்டிருந்தன என்பதனை ஆய்விற்கு உட்படுத்தி, இலங்கையில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை எவ்வகையில் அதிகரிக்க முடியும் என்பதனை இவ்வாய்வு முன்மொழிகின்றது. என குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடப்படும் ஜனாநாயக அரசியல் முறைமை என்பதற்குள் பால்நிலை சமத்துவமும் உள்ளடங்கும். தவிர, 1979 இல் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கு எதிரான அனைத்து பாரபட்சங்களையும் இல்லாதொழிப்பதற்கான சர்வதேசப் பிரகடனத்திலும் இலங்கை கைச்சாத்திட்டிருந்தது. இலங்கையின் சனத்தொகையில், 52 வீதமானவர்கள் பெண்களாகக் காணப்படுகின்றனர். ஆயினும், பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 6 வீதத்திற்கும் குறைவானதாகவே உள்ளது. இது உலக சராசரியான 23 வீதத்திலும் மிகக் குறைவானதாகக் காணப்படுகின்ற அதேவேளை, தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையிலும் இலங்கையில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறைந்த மட்டத்திலேயே உள்ளது. இதனடிப்படையில், இதற்கான காரணங்களை இலங்கையுடன் ஏனைய நாடுகளுடன் ஒப்பீடு செய்து முடிவுகளை முன்வைக்க இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. |
en_US |