dc.description.abstract |
பொதுவாக, வாக்கியங்கள் இரு வகைப்படும். ஒரு வகையின,
ஒரு பொருளை அடையாளப்படுத்துவன. அவற்றைக் குறிப்புநிலை
வாக்கியங்கள் என்பர். மறு வகையின ஒரு நிகழ்வைக் கூறுவன.
அவற்றைத் தெரிநிலை வாக்கியங்கள் என்பர். தெரிநிலை வாக்கியங்
களிற் பெரும்பாலானவை எழுவாய், செயப்படுபொருள், வினை
எனும் மூன்று கூறுகளையுடையன. எழுவாய் - செயப்படுபொருள்
- வினை எனும் வரிசை, சமகாலத் தமிழுக்கு மிக ஏற்றது. ஆயினும்,
கருத்துக் குழப்பமின்றேல், வரிசை மாற்றியும் எழுதலாம்: 'யானை
காட்டை அழித்தது' என்பதைக், 'காட்டை அழித்தது யானை'
'அழித்தது யானை காட்டை' என்றும் பிறவாறும் எழுதலாம். |
en_US |