Abstract:
சுவாமி விபுலாநந்தரால் எழுதப்பட்ட மதங்கசூளாமணியானது நாடகம், அரங்கு பற்றிய ஆழமான கூறுகளையும், நாடகக் கோட்பாடுகளையும் மையப்படுத்திய அரங்கவியல் ஆய்வு நூல். 1926 ஆம் ஆண்டில் எழுத்தப்பட்ட இந்த நூலில், விஞ்ஞான, கணித அறிவியலுடன் அரங்கவியல் எண்ணக்கருவை இணைத்து புலமைத்துவத் தேடலுடன் வெளிப்படுத்துகின்றது. தமிழ் நாடகத்தின் முக்கிய கூறுகளை வெளிப்படுத்தி, அதன் அரங்கப் பாரம்பரியங்களையும், சமஸ்கிருத மரபுகளையும், மேலைத்தேய சேக்ஸ்பியரின் நாடகக் கட்டமைப்புக்களையும் உள்வாங்கி கிழைத்தேயத்திற்கு ஒரு அரங்க கோட்பாட்டு மரபு உண்டு என்பதை விவாதிக்க வைக்கின்றது. இந்நூலை அணுகி, வியாக்கியானித்து வித்தியாசப்படுத்தும்போது புதிய அரங்கக் கருத்தியல் மேல் எழுகின்றது. கீழைத்தேய அரங்க மரபுகளை மையப்படுத்தி உறுப்பியல், எடுத்துக்காட்டியல், ஒழிபியல் எனும் மூன்று இயல்களிலும் உள்ளுர் சுதேசிய படைப்பாளிகளை உணர வைக்கின்றது. வில்லியம் சேக்ஸ்பியரின் நாடகப் பனுவலைப் படித்து அதன் பண்பை இந்திய நாடக சந்தி, சுவை, சந்தியும் சுவையும் ஆகிய நோக்கில் பகுத்து நுணுக்கமாக ஆராயப்பட்டுள்ளது. இதனூடாக காலனிய நீக்க எண்ணக்கருவின் தேடலுக்கு வித்துடுகின்றது. இதன் கருத்தியல் வெளிப்பாட்டை மையப்படுத்தியதே இவ்வாய்வு.