dc.description.abstract |
ஒரு விற்பனை நிலையத்தின் நீடித்த ஆயுளுக்கு அதன் மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள திருப்தி நிலை முக்கிய காரணியாகும். மட்டுப்படுத்தப்பட்ட கோறளைப்பற்று வாழைச்சேனை பலநோக்குக் கூட்டறவுச் சங்கப் பரப்பில் காணப்படும் நவீன கோப்சிற்றி விற்பனை நிலையங்கள் மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள திருப்திநிலை எந்தளவில் காணப்படுகிறது என்பது தொடர்பாக மதிப்பீடு செய்வதற்கு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வின் பிரதான நோக்கம் கோப்சிற்றி விற்பனை நிலையங்கள் மீதான வாடிக்கையாளர் திருப்தி நிலையினை அளவிடுவதாகும். அதனால் வாடிக்கையாளர் திருப்தியில் செல்வாக்குச் செலுத்தும் விற்பனை செய்யப்படும் பொருட்கள், விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு செலுத்தப்படும் விலைகள், விற்பனை நிலையத்தின் மேம்பாடுகள், விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள், விற்பனையின் போதான விநியோக முறைகள் என்பவை பற்றி ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நோக்கங்களின் அடிப்படையில் வாழைச்சேனை பிரதேசத்திற்கு உட்பட்ட கோப்சிற்றி விற்பனை நிலையங்களில் பொருட்கள் கொள்வனவில் ஈடுபடும் தெரிந்தெடுக்கப்பட்ட 200 வாடிக்கையாளர்கள் எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்டு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். இதன் மூலம் வாழைச்சேனை பிரதேசத்திற்குட்பட்ட நவீன கோப்சிற்றி விற்பனை நிலையங்களில் பொருட்கள் கொள்வனவில் ஈடுபடும் வாடிக்கையாளர்கள் கோப்சிற்றி விற்பனை நிலையங்கள் மீதான வாடிக்கையாளர் திருப்தி நிலை தொடர்பான விடயங்கள் பொருத்தமாக விற்பனை செய்யப்படும் பொருட்கள், விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு செலுத்தும் விலைகள், விற்பனை நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட மேம்படுத்தல்கள், விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள், விற்பனை நிலையத்தின் விநியோக முறைகள் என்பவற்றின் மீதான வாடிக்கையாளர் திருப்தி ஒரு நடுத்தரமாகக் காணப்படுகின்றது. இவ்வாறு கோறளைப்பற்று வாழைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் கீழ் அமந்துள்ள நவீன கோப்சிற்றி விற்பனை நிலையங்கள் மீதான வாடிக்கையாளர் திருப்தியினை பெறுவது தொடர்பான முன்மொழிவுகளும் பரிந்துரைக்கப்பட்டன. |
en_US |