Abstract:
கல்வித்தர முன்னேற்றத்தைக் கணீப்பீடு செய்யும் கருவியாக பொதுப்பரீட்சைகளே பயன்படுகின்றது. அந்தவகையில் க.பொ.த(சா/த)ப் பரீட்சை மாணவர்களின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாகும். இப் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக்கொண்டே க.பொ.த (உ/த)தரம் கற்பதற்கான தகுதி கணிக்கப்படுகின்றது. க.பொ.த (உ/த) கற்பதற்கான தகுதியில் தமிழ்ப்படத்தின் செல்வாக்கு இன்றியமையாததாகும். தாய்மொழியில் பிறந்து வளர்ந்து பதினொரு வருடங்களாக கற்று அப்பாடத்தில் சித்தியின்மை பெறுவது என்பது ஒரு தற்காலிக நிகழ்வு என்று தள்ளி வைத்து விடக்கூடியது அல்ல. மொழியாற்றலில் பின்னடைவு ஏற்பட்டால் அது ஏனைய பாடங்களிலும் தாக்கம் செலுத்துவதோடு க.பொ.த. உயர்தரத்தகுதியை இழக்கச்செய்யும் இதன்பின்னணியில் மாணவர்களை க.பொ.த (உ/த)த்திற்கு தகுதி பெறவைப்பதில் தமிழ்ப்பாட அடைவின் செல்வாக்கு என்ற தலைப்பில் இவ்வாய்வு அமைந்துள்ளது. இவ்வாய்வு மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள போரதீவுக் கோட்டப் பாடசாலைகளை மையமாக கொண்டே இவ்வாய்வு அளவு,பண்பு கலந்த கலப்பு முறையாக மேற்கொள்ளப்பட்ட அளவைநிலை ஆய்வாகும். இவ்வாய்வுக்காக 8 பாடசாலைகளும் 19 ஆசிரியர்களும், 45 மாணவர்களும் நோக்க மாதிரி,படிமுறை எழுமாற்றுமாதிரிமூலம் மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்டனர்.இங்கு ஆய்வுக்காக வினாக்கொத்து,ஆவணங்கள் என்பனவற்றை உள்ளடக்கிய ஆய்வுக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன. முதனிலை தரவுகள் தமிழ்ப்பாட ஆசிரியர்களிடமும்,மாணவர்களிடமும் வினாக்கொத்து வழங்கப்பட்டு தரவுகள் பெறப்பட்டு இலத்திரனில் விரிதாள்(Execl) முறைமைகளினூடாகப் அவை பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இவ்வாய்வானது க.பொ.த(சா/த)ப் பரீட்சையில் தமிழ்ப்பாட அடைவுமட்டத்தை இனங்கண்டதோடு எதிர்பார்த்த அடைவுமட்டத்தை அடையமுடியாமைக்கான காரணங்களாக கற்பித்தல் முறை,எழுதும்,வாசிக்கும் திறன்,குறிப்பிட்ட பாடப்பரப்புக்களில் கற்கும் ஆர்வம் போன்றவற்றை காரணங்களாக முன்வைக்கப்பட்டன. தமிழ்ப்பாட சவால்களாக அடைவினை அதிகரிப்பதில் எதிர்நோக்கும் வீட்டுவேலைப்பயிற்சி,மாணவர்வரவு,பெற்றோர் மாணவர் மீதான ஆர்வம்,நவீன கற்றல்கற்பித்தல் சாதனங்களின் பயன்பாடு போன்ற விடயங்கள் முன்வைக்கப்பட்டதோடு நவீன தொழினுட்ப சாதனங்களின் உதவியுடன் கற்பித்தல் முறையைப்பயன்படுத்தி தமிழ்மொழிப்பாட அடைவு மட்டத்தை அதிகரிக்கலாம் போன்ற முடிவுகளும் இவ்வாய்வினூடாக முன்வைக்கப்பட்டுள்ளன