Abstract:
பாடாசலையானது பல சமூகத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக உள்ளமையினால் பாடசாலைச் சூழலில் நிகழும் பல தனிமனித உறவுகளின் விளைவாக முரண்பாடுகள் தினசரி தோன்றுகின்றன அவ்ைைகயில் இவ்வாய்வின் முக்கிய நோக்கமாக பாடசாலையில் ஏற்படும் நிரவாக ஆசிரியர்கள் முரண்பாடுகளின் தன்மை, அதற்கான காரணங்கள் அதன் முகாமைத்துவம் செயற்பாடுகள் பரிந்துரைகளையும் தீர்வுக்காக மற்றும் முன்வைப்பதாக கையாளக்கூடிய அமைகின்றன. நட்பங்களையும். அந்தவகையில் ஆய்வுப்பிரதேசமான மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மர்முனை வடக்கு கல்விக்கோட்டத்திலுள்ள 8 (a) IAB பாடசாலைகள் நோக்க மாதிரி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு, அப்பாடசாலைகளிலுள்ள 59 ஆசிரியர்கள் இலகு எழுமாற்று மாதிரி எடுப்பினூடாகவும், பகுதித்தலைவர்களுள் 22 பேர் இலகு எழுமாற்று மாதிரி எடுப்பினூடாகவும், அதிபர், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள் 23 பேர் நோக்க மாதிரி எடுப்பினூடாக தெரிவு செய்யப்பட்டனர். தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வினாக்கொத்து வழங்கப்பட்டு, சேகரிக்கப்பட்ட தரவுகள் யாவும் பாடசாலை நிரவாகச் செயற்பாட்டில் முரண்பாடுகள் தோன்றுவதற்கான வாய்ப்புக்கள், முரண்பாடுகளுக்கான காரணங்கள், முரண்பாட்டினால் ஏற்படும் தாக்கங்கள், முரண்பாட்டு முகாமைத்துவத்தின் அவசியம், பொருத்தமான நுட்பங்கள் மற்றும் ஆலோசனைகள் போன்றன ஆய்வு நோக்கத்தின் அடிப்படையில் அளவு ரீதியாகவும். பண்பு ரீதியாகவும் பகுப்பாய்வு செய்யப்பட்டு எடுத்துக்கூறப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவுகளாக நிர்வாகிகள் முரண்பாடுகளை முகாமை செய்யும் திறன் குறைந்தவர்களாக காணப்படுவதுடன் இவர்களால் பிரயோகிக்கப்படும் சில முரண்பாட்டு முகாமைத்துவ நுட்பங்கள் ஆசிரியர்களின் செயற்பாடுகளுக்கு பொருத்தமாக அமைவதில் இடைவெளித் தன்மை காணப்படுவதும், முரண்பாட்டு முகாமைத்துவம் தொடர்பான பயிற்சிகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதன் அவசியமும் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது நிர்வாகிகள் முரண்பாடுகளை ஆக்கப்பூர்வமாக நிர்வகிக்கும் திறன்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற வகையில் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன