Abstract:
பாடசாலைகல்விப் பண்புத்தரத்தினை உறுதி செய்வதற்கு, பாடசாலை உள்கை எதிப்பீட்டு வேலைத்திட்டம் அவசியமானதாகும் பாடசாலை மட்ட உள்வாரி மதிப்பிட்டில் காணப்படும் பல்விளங்கள், பாடசாலையில் கல்லிப் பண்புத்தரத்தை உறுதி செய்வதை சவாலுக்கு உட்படுத்தியுள்ளன. இந்த ஆய்வின் நோக்கமானது பாடசாலை மட்ட உள்வாரி மதிப்பீட்டில் தற்போதைய நிலைமையை ஆராய்தல். அதை வெற்நிகரலாக நடைமுறைப்படுத்துவதற்கு தடையாக உள்ள காரணிகளைக் கண்டறிதல்,உலவாரி மதிப்பீட்டினை மேற்கொள்வதில் அதிபரின் வகிபங்கைப் மற்றும் உள்வாரி மதிப்பீட்டினை வினைத்திறன வினைதிறன் மிக்கதாக்குவதற்கான ஆலோசனைளையும் பரித்துரைகளையும் முன்வைத்தல் போன்ற விடயங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த ஆய்வானது அளவறி மற்றும் பணபறி முறைகள் இரண்டும் கலந்த கலப்பு முறையிலே மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மேற்கு வலயத்திலுள்ள ஏறாவூர் பற்று மேற்கு கோட்டத்தை அடிப்டையாகக் கொண்டதாக இந்த ஆய்வு அமைகின்றது. ஆய்வுக்காக இக்கோட்டத்திலுள்ள 17 பாடசாலைகளில் இருந்து IC பாடசாலைகள் 02உம் Type - 11 பாடசாலைகள் 03 உம் Type III பாடசாலைகள் 06 உம் தெரிவு செய்யப்பட்டுள்ளன அப்பாடசாலைகளின் அதிபர்கள் 11 பேரும் மற்றும் ஆசிரியர்கள் 30 பேரும் மதிரித் தெரிவாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து வினாக்கொத்து, நேர்காணல் மற்றும் ஆவணங்கள் மூலம் பல தரவுகளும் தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆய்வின் சிறப்பு நோக்கங்களின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட தரவுகள் யாவும் அளவுசார்ந்தும் பண்புசார்ந்தும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவுகளிலிருந்து, பாடசாலை மட்ட உள்வாரி மதிப்பீட்டு வேலைத்திட்டம் 90% வினைத்திறன் மற்றும் விளைதிறன் இன்றி மேற்கொள்ளப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உள்வாரி மதிப்பீட்டின் முக்கியத்துவம் மற்றும் அதன் தேவை உணரப்படாத நிலைமை 75% காணப்படுகின்றது. பாடசாலைகளில் கடமைக்காக மாத்திரம் உளவாரி மதிப்பீடு செய்யப்படுவதுடன் அவை பகுப்பாய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு பரிகாரச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படாத நிலைமை 85% மேல் உள்ளது. உள்வாரி மதிப்பீடு தொடர்பில் அதிபர் ஆசிரியர்கள் போதியளவு பயிற்சிகள் இன்றி 75% மேல் இருப்பதை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பாடசாலை மட்டத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் ஊடாகவும் அதிபர் ஆசிரியர்களுக்கு போதியளவு பயிற்சிகளையும் வழங்குவதன் மூலமும் உள்வாரி மதிப்பீட்டு வேலைத்திட்டத்தைமேம்படுத்தி பாடசாலைகளின் கல்விப் பண்புத்தரத்தை உறுதிப்படுத்தலாம்