Abstract:
இந்த இருத்தோராம் நூற்றாண்டானது அறிவு மையச் சமூகத்தையும் அறிவு பொருளாதாரத்தையும் முதலீட்டையும் கொண்டதாக மாறிவிட்டிருக்கின்றது. என்பது இலக்குகளையும் தோக்கங்களையும் தேர்ச்சிகளையும் அளவிட்டுச் சட்டிகளையும் கொண்டதாகும். இவை மிகச் சரியாக அடையப் பெறுகின்றனா மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கான முகாமைத்துவ மேற்பார்வைப் பொறிமுல்லுகளை கல்வியமைச்சு காலத்துக்குக் காலம் பின்பற்றி வந்துள்ளது. இந்த அடிப்படையில் 2019 இ வெளியிடப்பட்ட மேற்பார்வைச் செயன்முறையானது இன்றுவரை நடைமுறையில் இருப்பதைக் காணலாம். ஆனால், இம்மதிப்பீட்டு நடைமுறையில் பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பிரதான ஆய்வுப் பிரச்சினையை மையமாகக் கொண்டு 2015 இல் அறிமுகஞ் செய்யப்பட்ட கல்வியின் பணிபுந்தரத்தினை உறுதி செய்வற்கான சுட்டிகளின் மதிப்பீடு பற்றிய ஆய்வு (சம்மாந்துறை பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட அளவைநிலை ஆய்வு)" எனும் தலைப்பு ஆய்வாளனாய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகை கல்வி மதிப்பீடுகளில் பின்பற்றப்படும் பண்புத்தர கட்டிகளில் காணப்படும் பிரச்சினைகளை இணங்கண்டு அவற்றுக்கான பொருத்தமான மாற்றுத் தீர்வுகளை முன்வைத்தல் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. சம்மாந்துறை வலயத்திலுள்ள மூன்று கோட்டங்களிலுமுள்ள 70 பாடசாலைகளிலிருந்தும் ஒவ்வொரு கோட்டத்திலுமிருந்தும் மொத்தம் 12 பாடசாலைகளும் அதன் அதிபர்களும், மதிப்பீட்டுத்துறை பொறுப்பாசிரியர்கள் 12 பேரும் பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று, 3 பிரதி/ உதவிக் கல்விப்பணிப்பாளர்களும், 3 ஆசிரிய ஆலோசகர்களுமாக மொத்தம் 6 பேரும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். அத்தோடு பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களும் நேர்காணலுக்கும் உட்படுத்தப்பட்டு ஆய்வுக்குட்ப டுத்தப்பட்டுள்ளனர், பாடசாலையின் ஆவணங்கள் மற்றும் ஏனைய ஆவணங்கள் மூலமாகவும் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. பெறப்பட்ட தரவுகள் அளவு மற்றும் பண்புரீதியாகவும் காணப்படுவதால் இரண்டும் இணைந்த அமைப்பில் தரவுப் பகுப்பாய்வுச் செயன்முறை இடம்பெற்றுள்ளது. அட்டவணைகள், வரைபுகள், உருக்கள் என்பவற்றின் மூலமாகவும் இடம்பெற்றுள்ளது.
கல்வியின் பண்புத்தரச் சுட்டிகளை மதிப்பீடு செய்வதில் எதிர்கொள்ளும் சவால்களாக அதிபர் ஆசிரியர்களின் ஆர்வமின்மை, பிரத்தியேகமான முறைகள் பின்பற்றப்படாமை, பயிற்சித் தேவைகள் நிறைவேற்றப்படாமை, ஆசிரியர் ஒத்துழைப்பின்மை, வேலைப்பளு, விளங்காமை, சுட்டிகள் பற்றிய தெளிவின்மை, வளப்பற்றாக்குறை போன்றன கண்டறியப்பட்டுள்ளன. எனவே, நடைமுறையிலுள்ள கல்வியின் பண்புத்தரச் சுட்டிகளை வினைத்திறனாக மதிப்பீடு செய்கின்றபோது தரமான மாணவர் சமூகத்தை உருவாக்கி தரமான சமூகத்தைக் கட்டியெழுப்பலாம். இதற்காக இவ்வாய்வின் விதப்புரைகளையும் ஆலோசனைகளையும் பின்பற்றலாம்