Abstract:
மாணவர்களது மொழித்திறன் விருக்கும் மீளவலியுறுத்தலுக்கும் இடையிலான தொடர்பினை எடுத்துக்காட்டுவதற்காக "களிஷ்ட இடைநிலைப் பிரிவு மாணவர்களுடைய மொழித்திறன் விருத்தியில் மீளவலியுறுத்தலின் செல்வாக்கு" எனும் தலைப்பில் அளவை நிலை ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வகையில் மாணவர்களுடைய மொழித்திறன் விருத்திக்கும் மீளவலியுறுத்தலுக்கும் இடையிலுள்ள தொடர்புகளினைக் கண்டறிதல், மீளவலியுறுத்தலினை பொருத்தமான வகையில் பிரயோகிப்பதில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்களை இனங்காணல், மொழித்திறன் விருத்திக் குறைபாடுடைய மாணவர்களுக்கு மீளவலியுறுத்தல் நுட்பங்களை உரிய காலப்பகுதியில் பிரயோகிக்காது விடுவதால் ஏற்படும் விளைவுகளை ஆராய்தல் மற்றும் மீளவலியுறுத்தலினைப் பின்பற்றி மொழித்திறன் விருத்திக் குறைபாடுடைய மாணவர்களை மீட்டெடுப்பதற்கான ஆலோசனைகளை முன்வைத்தல் ஆகிய ஆய்வு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வானது ஆலையடிவேம்புக் கோட்டத்திற்குட்பட்ட மொழித்திறன் விருத்திக் குறைபாடுடைய மாணவர்களினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் நோக்க மாதிரியின் அடிப்படையில் 1AB பாடசாலை இரண்டும் 1C பாடசாலை மூன்றும் வகை II பாடசாலை ஐந்தும் என மொத்தமாக 10 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அதிபர்கள் (10) தமிழ்ப் பாட ஆசிரியர்கள் (17) தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் மொழித்திறன் விருத்திக் குறைபாடுடைய மாணவர்கள் ஆண், பெண் எனுமடிப்படையிலும் (3:1 எனும் விகித அடிப்படையில் மொத்தமாக 790) பெற்றோர்கள் மொழித்திறன் விருத்திக்குறைபாடுடைய ஆண் மற்றும் பெண் மாணவர்களது பெற்றோர்கள் எனும் அடிப்படையிலும் படையாக்கப்பட்ட மற்றும் இலகு எழுமாற்று மாதிரியின் மூலம் (3:1 எனும் விகித அடிப்படையில் மொத்தமாக 79பேர்) தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் தமிழ்ப்பாட உதவிக்கல்விப்பாளரையும் உள்வாங்கி மாதிரித் தெரிவானது எடுக்கப்பட்டுள்ளது. இம்மாதிரிகளிடமிருந்து வினாக்கொத்து, நேர்காணல் மற்றும் அவதானம் ஆகிய ஆய்வுக்கருவிகளின் மூலம் பெறப்பட்ட தரவுகள் அளவு மற்றும் பண்பு ரீதியாகவும் பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வில் நேர்மீளவலியுறுத்தல் நுட்பங்களை பிரயோகிப்பதன் வாயிலாக மாணவர்களது மொழித்திறன் செயற்பாட்டில் ஆர்வம் அதிகரிக்கும் என 58.82% ஆன ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர் அத்துடன் பேச்சுத்திறனை விருத்தி செய்வதற்குகாக கூச்ச சுபாபத்தைத் தணிக்க மாணவர்களிற்கு அங்கீகாரம் வழங்கல் வேண்டும் என 23.53% ஆன ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். போன்ற முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளதுடன் முடிவுகளுக்கேற்ப விதப்புரைகளும் வழங்கப்பட்டுள்ளது. திறவுச் சொற்கள் வாசிப்புத்திறன், எழுத்துத்திறன், பேச்சுத்திறன், கிரகித்தல் திறன்