Abstract:
ஆசிரியர்களின் வகுப்பறை முகாமைத்துவ செயற்பாடுகள் மாணவர்களின் அடைவுமட்டத்தில் ஏற்படுத்தும் செல்வாக்கு (போரதிப்பற்றுகோட்ட கவிஸ்ட இடைநிலைப் பாடசாலை அடிப்படையாகக் கொண்ஆய்வு) எனும் தலைப்பினை அடிப்படையாகக் கொண்டு, போரதீவுப் பற்றுக் கல்விக் கோட்டத்திலுள்ள 33 பாடசாலைகளில், படையாக்கப்பட்ட மாதிரி, எளியஎழுமாற்று, மாதிரி நோக்க மாதிரி, ஆகிய நுட்பமுறைகள் கையாளப்பட்டு 10 பாடசாலைகள் ஆய்வு மாதிரியாகத் தெரிவு செய்யப்பட்டு 10 பாடசாலைகளின் அதிபர்களும் நோக்க மாதிரியின் அடிப்படையிலும் ஆசிரியர்கள் மாணவர்கள் இலகு எழுமாற்று மாதிரியின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டனர். ஆய்விற்காகத் தரவுசேகரித்தல் கருவிகளான வினாக்கொத்து ஆவணம் ஆகியன பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாக பெறப்பட்ட அளவறிசார் தரவுகள் Microsoft Excel முறை மூலமாகவும் பண்பறிசார் தரவுகளும் வியாக்கியானம் செய்யப்பட்டு பெறுபேறுகளும் முடிவுகளும் கண்டறியப்பட்டுள்ளன. இவ் ஆய்வின் கண்டறிதல்களாக வகுப்பறை முகாமைத்துச் செயற்பாடுகளை பின்பற்றும் ஆசிரியர்களது பாடங்களில் மாணவர்களின் அடைவு உயர்வாக உள்ளமையும், பெரும்பாலான ஆசிரியர்கள் வகுப்பறை முகாமைத்துவச் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுக்காமையும் கற்றலுக்கு உகந்த வகுப்பறைச் சூழல் ஏற்படுத்திக் கொடுக்காமையும் ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தலில் போதியளவு ஆர் கொண்டிராமையும் மாணவர்களின் தனியாள் வேறுபாடுகளை கவனத்திற் கொள்ளாமையும் அறியப்பட்டுள்ளன. இவற்றை போக்கிகற்றல் கற்பித்தலை வினைத்திறனுடையதாக மாற்றுவதற்கு ஆசிரியர்களுக்கு போதியளவு பயிற்சிகள் வழங்கப்பட்டு வகுப்பறை முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு மேற்பார்வையையும் பலப்படுத்தவேண்டும்