Abstract:
பாடசாலை மாணவர்களின் கல்வி அடைவுமட்டத்தினை மேம்படுத்தும் முயற்சி, கல்வி முறை பற்றிய முக்கியமான விவாதத்தை ஆக்கிரமித்துள்ளது. பெரும்பாலான பாடசாலைகள் இன்னும் குறைந்த கல்வித் அடைஷாட்டத்தைக் காட்டினாலும் பெரும்பாலான நிறுவனங்கள் செயல்திறன் அைைவ மேம்படுத்த பெரும்தொகையைப் பயன்படுத்தத் தயாராகவுள்ளன. அக்கரைப்பற்று வலயத்திலுள்ள நடைமுறையில் காணப்படும் பாடசாலைகளின் தந்திரோபாய அபிவிருத்தித் திட்டமானது பாடசாளைகளில் கல்வி கற்கும் க.பொ.த உயர்தர வகுப்பு மாண அடைவுமட்டங்களில் எவ்வாறான செல்வாக்கினை செலுத்துகின்றது என்பதனை கண்டறிவதுடன் இவ்வலயப் பாடசாலை அதிபர்களுக்கு தந்திரோபாய அபிவிருத்தித் திட்டத்தின் முக்கியத்துவத்தையும் உணர்த்துதலே இவ்வாய்வின் முக்கிய நோக்கம். இவ்வாய்வு அளவீட்டு ஆய்வு முறையில் அமைந்து தத்திரேபாய அபிவிருத்தித் திட்டம், பாடசாலையில் மாணவர்களின் கல்வி அடைவுமட்ட விருத்தி பற்றிய பல தகவல்களைத் திரட்டி பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள 1AB மற்றும் IC வகையிலுள்ள பதினான்கு பாடசாலைகள் இவ்வாய்விற்காகத் தெரிவு செய்யப்பட்டதுடன் அதிலிருந்து பதினான்கு அதிபர்களும், பதினான்கு பிரதி அதிபர்களும், இருபத்துமூன்று பகுதித் தலைவர்களும் குறித்த நோக்கு மாதிரி தெரிவின் மூலமும், தொன்னூற்றொன்பது மாணவர்களும் குறித்த இலகு எழுமாற்று மாதிரி தெரிவின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து வினாக்கொத்து, நேர்முகங்காணல் மற்றும் ஆவணச் சான்றுகள் மூலமாக தரவுகள் சேகரிக்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட தகவல்கள் யாவும் ஆய்வின் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன. க.பொ.த (உத) பரீட்சைகளில் சித்திமட்டம் இன்றும் 70% இற்கும் குறைவாகக் காணப்படல், தந்திரேபாயத்திட்டம் வினைத்திறனாகப் பயன்படுத்தப்படாமை என்பன பிரச்சினைகளாகவும் காணப்பட்டன. மேலும் இங்கு அடைவுமட்டத்தினை அதிகரிப்பதில் காணப்படும் பிரச்சினைகளும் அதனை தீர்ப்பதற்கான முடிவுகளும், தந்திரோய அபிவிருத்தித் திட்டத்தின் தற்போதைய நடைமுறையும் அதனை நிபர்த்தி செய்யும் வழிமுறைகளையும், அடைவுமட்டம் மற்றும் தந்திரோபாய திட்டமிடலிற்கிடையிலான தொடர்பு என்ன என்பதையும் தீர்வுகளாக
முன்வைக்கப்பட்டன