Abstract:
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதுகல்லியாணி கற்கைநெறியின் ஓர் பருதி தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இவ்வாய்லானது "உபொத உயர்தர கலைப்பிரிவு மானாவர்களின் பாடத் தெரிவில் தொழில் வழிகாட்டம் ஆலோசவை சேவையின் வகிபங்கு" எனும் தலைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாடசாலைகளில் வழங்கப்படும் கல்விக்கும் தொழில் சந்தையின் எதிர்பார்ப்புக்கும் இடையில் பரி இடைவெளி காணப்படுகின்றது. பாடசாலையைவிட்டு வெளியேறுகின்ற மார்களால் தொழில் உலகின் சவால்களை முகங்கொடுக்க முடியாமை, வேலையற்றோர் பட்டியல் அதிகரிப்புக்கு அடிப்படையாக உள்ளது. பாடசாலை மட்டத்தில் உயர்தர பிரிவு மாணவர்கள் வழிப்படுத்தப்படுவதுடன் குறிப்பாக கலைப்பிரிவு மாலாவர்கள் நமது பாடத்தெரிவு தொடர்பில் வழிப்படுத்தப்படுவதற்கு பொருத்தமான பொறிமுறையை முன்வைப்பதனையே இவ் ஆய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாய்விற்காக சம்மாந்துறைக் கல்வி வலயத்தில் நாவிதன்வெளிக் கல்விக் கோட்டத்தில் உள்ள IAB, IC பாடசாலைகள் ஏழும், அப்பாடசாலைகளின் வழிகாட்டல் ஆலோசனைக்குப் ஆசிரியர்களும், அப்பாடசாலைகளின் ஏழு அதிபர்களும் நோக்க மாதிரி அடிப்படையிலும், இப்பாடசாலைகளில் கல்வி கற்கும் உயர்தர கலைப்பிரிவு மாணவர்கள் நூறு போ 13 எனும் அடிப்படையில் எளிய எழுமாற்று அடிப்படையில் மாதிரிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர், வினரக் கொத்து, ஆவணங்கள் பரீட்சிப்பு முறைகள் ஆய்வுக் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெறப்பட்ட தரவுகளில் அளவு ரீதியானவை அட்டவணைகள், வரைபுகள் மூலமும், பண்பு ரீதியானவை நூற்று வித அடிப்படையிலும் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. இது அளவு ரீதியாகவும், பணபு ரீதியாகவும் பாடசாலைகளி கலப்பு முறையில் வேண்டிய மேற்கொள்ளப்பட மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழில் வழிகாட்டலோடு தொடர்புடைய செயற்பாடுகளை சரியாக திட்டமிடமை, பொருத்தமான வளவாளர்கள் தொடர்புபடுத்தப்படாமை, நிரமமான மேற்பார்வை இன்மை போன்றவை மாணவர்கள் பாடத் சவால்களுக்கான எதிர்நோக்கும் தெரிவில் காரணிகளாக கண்டறியப்பட்டுள்ளதுடன் தொழில் வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர்கள் இது தொடர்பில் நிகழ்ச்சித் திட்டங்களை வடிவமைத்து கிரமமான முறையில் நடைமுறைப்படுத்தல், இதனை அதிபர்கள், துறைசார் அதிகாரிகள் மேற்பார்வைக்கு உட்படுத்தல் என்பவை விதப்புரைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.