Abstract:
பாடசாலை ஒன்றில் காணப்படும் வளங்களை மாணவர்கள் உச்ச அளவில் பயன் படுத்துவதனால் சுற்றல் செயற்பாட்டில் சிறந்த அடையிலை பெறமுடியும். அவ்வாறின்றி ஆய்விற்காக தெரிவு செய்யப்பட்ட இப்பிரதேச பாடசாலைகளிலே காணப்படுகிறை வளங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதனால் மாணவர்களின் சுற்ற அடைவில் வீழ்ச்சி ஏற்படுகின்றது. எனும் ஆய்வுப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இப்பிரச்சினையை கண்டறிந்து மேம்படுத்துவதற்கான விதப்புறைகளை முன்மொழிவதாக இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாய்விற்காக IAB,IC.வகை!! பாடசாலைகளில் இருந்து ஆய்வு மாதிரிகளாக அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டரை. இவ்வாய்விற்கென தெரிவு செய்யப்பட்ட 10 பாடசாலைகள் நோக்கமாதிரித் தெரிவின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளன. பாட்சாலைகள் தெரிவு செய்யப்பட்டமைக்கு அமைவாக சேகரிக்கப்பட்ட தரவுகள் மூலம் மாணவர்கள் பாடசாலை வளங்களை எவ்வாறு பயன்படுத்துகின்றனர். அவற்றை பயன்படுத்தாமைக்கான காரணங்கள் வளங்களை பாதுகாப்பதற்கு மாணவர்களை வழிப்படுத்தல், அதிபர் எதிர்நோக்கிய பிரச்சினைகள், இப்பிரச்சினையை நீர்க்க அதிபர் கையாள வேண்பிய உபாயங்கள். நுட்பங்கள், ஏனையோரின் வகிபங்கிற்கான வழிமுறைகள் போன்றவை ஆய்வு நோக்கத்தின் அபிப்படையில் பண்புரீதியாகவும் அளவுரீதியாகவும் பகுப்பாய்வு செய்யப்பட்டு எடுத்துக்கூறப்பட்டுள்ளன. ஆய்விற்கான தரவு சேகரித்தல் கருவிகளாக வினாக்கொத்து, நேர்காணல், ஆவணங்கள் ஆகியன பயன்படுத்தப்பட்டன.
கோறளைப்பற்றுக் கல்விக்கோட்டததிலே பாடசாலைகளில் காணப்படும் வளங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதாலும் வளங்கள் முறையான விதத்தில் பேணப்படாமையினாலும் வளத்தாக்கம் ஏற்படுகின்றது பாடசாலைகளின் மாணவர்களின் கற்றல் அடைவிலும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. எனக்கண்டறியப்பட்டதோடு, இப்பிரச்சினைக்கு பாட்சாலை மீதாள் சமூகத்தின் பார்வை அக்கறை என்பளவும் காரணமாக அமையதுடன் மாணவர்களுக்கு அறிவுறைகளை கூறிநல்வழிப்படுத்த ஆசிரியர்கள் நடவபிக்கை மேற்கொள்ளவும், தொடர்பிரச்சினையான மாணவர்களுக்கு அதிபர் தகுந்த ஒழுக்காற்று நடவடக்கைகளை மேற்கொண்டு பாடசாலை வளங்களை பாதுகாக்கவும் மாணவர்கள் ஆசிரிய வளங்களை முறையாக பயன்படுத்தி கற்றலில் தேர்ச்சி பெறவும் பாடசாலைக்கு தேவையான கற்றல் உபகரணங்கள், மேலதிக வளங்களை பெற்றுக்கொள்ளவும் அதிபர் இதன் ஊடாக பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் இவ் ஆய்வு அமைகின்றது