Abstract:
பட்டிருப்புக் கல்வி வலயத்தில் போரதீவுப்பற்றுக் கோட்டம் சாலை பொரு சாதாரண தரத்தில் கற்கும் மாணவபும்பியல் பாட குறைந்த அடைவானது அண்மைக்கால உபொத சாதாரண தர பரீட்சைப் பெறுபேற்று பகுப்பாய்வு மூலமாக அறிய முடிகின்றது. இம்மாணவர்கள் புமியியல் பாடத்தில் உயர் அடைவுகளைப் பெறுவதற்குச் சவாலாகவுள்ள காரணிகளைக் கண்டறிவதும், அவற்றை அழிவளவாக்குவதற்குரிய முன்மொழிவுகளை முன்வைப்பதும் இவ்வாய்வினுடைய நோக்கமாகும். பட்டிருப்புக் கல்வி வலயத்தில் அமைந்துள்ள போரதீவுப்பற்றுக் கோட்டத்தில் உள்ள 32 பாடசாலைகளில் 11 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன. நோக்க மாதிரியின் அடிப்படையில் அதிபர்கள். ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன், படையாக்கப்பட்ட எழுமாற்று மாதிரியின் அடிப்படையில் 50 சதவீத மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டு, தரவானது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் வினாக்கொத்து மூலமாகவும், அதிபர்களிடம் நேர்காணல் மூலமாகவும் பெறப்பட்டு கணினியின் Excel மென்பொருளினூடாக பகுப்பாய்வு செய்யப்பட்டு வியாக்கியானம் மூலம் முடிவுகள் பெறப்பட்டுள்ளன. க.பொ.த சாதாரண தர புவியியல் பாட அடையுமட்ட வீழ்ச்சிக்கான சவால்களை இனங்காணும் முகமாகவும், அச்சவால்களை இழிவளவாக்கி புவியியல் பாட உயர் அடைவுமட்டத்தினை எதிர்காலத்தில் அதிகரிக்கச் செய்வதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய முன்மொழிவுகளையும் உள்ளடக்கியதாக ஆய்வு வினாக்கள் வழங்கப்பட்டு அவை பகுப்பாய்வு செய்யப்பட்டு ஆய்வு முடிவுகள் பெறப்பட்டன. புவியியல் பாடத்திற்கு உரிய பௌதிக வளங்களைப் பெற்றுக் கொடுக்காமை, கற்பித்தல் செயற்பாடுகளில் நவீன கற்பித்தல் சாதனங்கள் மற்றும் நவீன கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தாமை, வினைத்திறனான மேற்பார்வையின்மை, கலைத்திட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாமை போன்ற முகாமைத்துவம்சார் செயற்பாடுகள் வினைத்திறனற்ற நிலையில் காணப்படுவதனால் புவியியல் பாடத்தில் மாணவர்கள் உயர் அடைவினைப் பெற் முடியாதிருந்தது. எனவே எதிர்காலத்தில் முகாமைத்துவம்சார் சவால்களை இழிவளவாக்கி புவியியல்பாட உயர் அடைவுக்கு எவ்வாறான பங்களிப்புக்களை வழங்க வேண்டும் போன்ற விடயங்கள் விதப்புரைகள் மூலமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.