Abstract:
மாணவர்களிடம் ஏற்படுத்த விரும்பும் விஷேட திறன்களுக்கான சந்தர்ப்பங்கள் அடிக்கடி ஏற்படுத்தப்படும் போதே அவர்களிடம் வாழ்நாள் பூராகவும் நிலைத்து நிற்கக்கூடிய நிலைபேறான நடத்தைகளும் மனப்பாங்கும் மாற்றமடையும் இவ்வாறான நடத்தைகளை ஏற்படுத்துவதில் கற்றற செயற்பாடுகள் தவறிவிட்ட போதிலும் பாடசாலைக்கூடாக முறையாக வழங்கப்படுகின்ற இணைக்கலைத்திட்ட செயற்பாடுகள் பூரணமாக துணை புரிகின்றன. இணைக்கலைத்திட்ட செயற்பாடுகளை கிரமமாக நடைமுறைப்படுத்துவதில் குறைபாடுகளும் ஆளுமைக்குறைபாடுகளும் காத்தான்குடி அவதானிக்கப்பட்டமையால் காத்தான்குடி கல்விக் கோட்ட பாடசாலைகளின் கோட்டத்தில் சிரேஷ்ட இடைநிலைப் பிரிவு மாணவர்களின் ஆளுமை விருத்தியில் இணைக்கலைத்திட்ட செயற்பாடுகளின் செல்வாக்கினை கண்டறிந்து இணைக்கலைத்திட்ட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் பாடசாலைகளில் காணப்படும் தடைகளை இழிவளாக்குவதற்கான தீர்வுகளை முன்வைத்தல் எனும் பொது நோக்கத்திற்கமைய "சிரேஷ்ட இடைநிலைப் பிரிவு மாணவர்களின் ஆளுமை விருத்தியில் இணைக்கலைத்திட்ட செயற்பாடுகளின் செல்வாக்கு"எனும் தலைப்பில் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது. காத்தான்குடி கல்விக் கோட்ட சிரேஷ்ட இடைநிலைப் பாடசாலைகளில் 8 பாடசாலைகளை மாதிரியாகக் கொண்டு சிரேஷ்ட இடைநிலைப் பிரிவிலிருந்து 80 மாணவர்கள் படையாக்கப்பட்ட எழுமாற்று மாதிரி எடுத்தல் முறையிலும் 32 ஆசிரியர்கள். 8 விளையாட்டுப்பயிற்றுனர்கள் 8 அதிபர்கள் மற்றும் இணைக் கலைத்திட்ட உதவிக்கல்விப் பணிப்பாளரும் நோக்க மாதிரியினடிப்படையிலும் தெரிவுசெய்யப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளனர். தலைமைத்துவம். தொடர்பாடல் திறன் தன்னம்பிக்கை, சமூகமான தன்மை. நேர முகாமை, சுய ஒழுக்கம். நேர்ச்சிந்தனை, புத்தாக்கம், சுய திருபதி, பௌதிக உடலமைப்பு, கற்றல் திறன் ஆகிய 11 ஆளுமைப்பண்புகளினூடாக மாணவனது ஆளுமை வரையறுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. வினாக்கொத்து, நேர்காணல் மற்றும் ஆவணப்பகுப்பாய்வு ஆகிய ஆய்வுக்கருவிகளினூடாக தரவுகள் பெறப்பட்டு ஆய்வு நோக்கத்திற்கமைய எண் ரீதியாகவும் அளவு ரீதியாகவும் பகுப்பாய்வு செய்யப்பட்டு அட்டவணைகள், வரைபுகள், சதவீதங்களினுடாக முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வாய்வில் பெறப்பட்ட முக்கியமான முடிவுகளாக மாணவர்களிடம் விருப்பமும் ஈடுபாடும் இருந்தும் இணைக்கலைத்திட்ட வாய்ப்புக்களின் பல்வகைத்தன்மை பாடசாலைகளில் குறைவாகவே காணப்படுகின்றன. இணைக்கலைத்திட்ட செயற்பாடுகளில் அதிகம் பங்கு கொள்ளும் மாணவர்கள் ஆளுமைப்பண்புகளை அதிகம் வெளிக்காட்டுகின்றனர். இவ்விரண்டுக்குமிடையிலான இணைபுக்குணகம் (r = 0.66) மூலம் இதனை உறுதிப்படுத்த முடிந்தது. வளத்தட்டுப்பாடு. பயிற்சிபெற்ற ஆளணியினரின்மை, மற்றும் பரீட்சை மைய செயற்பாடுகள் உட்பட பல்வேறு காரணிகள் தடையாக அமைகின்றன. இவற்றுக்கான தீர்வுகளாக இணைக் கலைத்திட்டத்திற்கான வாய்ப்புக்களை அதிகரித்தல், இச்செயற்பாடுகளில் பாடசாலை சமூகத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளல். முறையான திட்டமிடல், முறைசார் கலைத்திட்டத்தையும் இணைக்கலைத்திட்டத்தையும் சமநிலையாக செய்யக்கூடிய திட்டங்களை வகுத்தல் ஆகியன முன்வைக்கப்படுகின்றன