Abstract:
பாடசாலையின் வளப்பற்றாக்குறையானது சிரேஷ்ட இடைநிலை மாணவர்களின் சுற்றலில் ஏற்படுத்தும் செல்வாக்குகள்" எனும் தலைப்பில் அமைந்த ஆய்வாளது IAB,C வகைப்பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. வளங்கள் போதியளவு கிடைக்கப்பெறாத நிலையினால் இப்பிரதேசப் பாடசாலைகளிலே சுற்றலில் பின்தங்கிய நிலை தோன்றுகின்றது. இதனடிப்படையிலேயே பாடசாலையின் வளப்பற்றாக்குறையானது சிரேஸ்ட இடைநிலை மாணவர்களின் கற்றலில் ஏற்படுத்தும் தாக்கத்தை கண்டறிதல்" எனும் ஆய்வு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வானது போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்விற்காக ஆய்வு மாதிரிகளாக அதிபர், ஆசிரியர்கள். மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாய்விற்கென தெரிவு செய்யப்பட்ட 9 பாடசாலைகள் நோக்கமாதிரித் தெரிவின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளன. பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டமைக்கு அமைவாக அதிபர்களும் தெரிவு செய்யப்பட்டனர். ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் படிமுறையாக்கப்பட்ட மாதிரி மூலம் தெரிவு செய்யப்பட்டு பின்பு எளிய எழுமாற்று மாதிரித் தெரிவின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர். ஆய்விற்கான தரவுசேகரித்தல் கருவிகளாக வினாக்கொத்து, நேர்காணல், அவதானம் ஆகியன பயன்படுத்தப்பட்டன. இவற்றின் மூலமாகப்பெறப்பட்ட தரவுகள் அளவுசார் மற்றும் பண்புசார் தரவுகள் பொருத்தமான மென்பொருள் முறைகளினூடாக பகுப்பாய்வு, வியாக்கியானம், கலந்துரையாடல் போன்ற செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்படுகின்றன. பகுப்பாய்வு மூலம் பல்வேறு முடிவுகளைக் கண்டறிய முடிகின்றது. போரதீவுக்கோட்டத்திலே சிரேஷ்ட இடைநிலை வகுப்புக்களில் வளப்பற்றாக்குறையானது பாரிய தாக்கத்தினைச் செலுத்துகின்றது. இத் தாக்கமானது பாடசாலைகளின் அடைவு மட்டத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. அதாவது இப்பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தியில், பரீட்சைகளின் அடைவுமட்டங்கள் குறைதல், இணைப்பாட விதானச் செயற்பாடுகளின் சாதனை மட்டங்களில் தொய்வு நிலை, கற்றல் சூழல் பாதிப்படைதல், மாணவர் விருப்பமான பாடத்தை தெரிவு செய்து கற்க முடியாமை, பாடசாலைகள் குறித்த இலக்கினை அடையமுடியாமை போன்ற பல்வேறு வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றது எனக்கண்டறியப்பட்டதோடு, இது தொடர்பில் பல பிரச்சினைகளும் இனங்காணப்பட்டு, வளப்பற்றாக்குறை மாணவர்கள் மத்தியில் கற்றலில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது கண்டறியப்பட்டு இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விதப்புரைகளும் இவ் ஆய்வினூடாக முன்வைக்கப்பட்டுள்ளன.