Abstract:
பாடசாலைக் கற்றல் வள நிலையங்கள் ஒரு மாணவர்களின் அறிவுசார் தேடலின் களமாகவும், சேமிப்பகமாகவும் காணப்படுகின்றன. இந்தக் கற்றல் வள நிலையங்கள் முறைசார்ந்த கல்வியினதும் முறைசாராக கல்வியினதும் வளரச்சியில் இணைந்து அறிவை வளர்க்கும் இடையிட்டு ஊடகமாக செயற்படுகின்றன. இக்கற்றல் வள Баяношливияня முறையாகவும் வினைத்திறனாகவும் கையாளும் போது மாணவர்களிடத்தே சுய கற்றலை வாக்கப்படுத்திக் கொள்ள முடியும் என்பதை வலியுறுத்தும் வண்ணம் "க.பொ.த (உ/த) மாணவர்களிடத்தில் சுயகற்றலை விருத்தி செய்வதில் பாடசாலை கற்றல் வள நிலையங்களின் வகிபங்கு" எனும் தலைப்பில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்காக கல்முனைக் கோட்டப்பாடசாலைகளில் சுற்றல் வள நிலையங்கள் உள்ள மாதிரிப்பாடசாலைகள் ஐந்து தெரிவு செய்யப்பட்டு அங்கு கல்வி கற்கும் க.பொதாஉ/த) மாணவர்கள் 0 பேரும், கற்றல் வளப் பொறுப்பாளர்கள், பாட ஆசிரியர்கள் அதிபர்கள் போன்றவர்களையும் மாதிரிகாளாகக் கொண்டு ஆய்வு நோக்கத்தின் அடிப்படையில் பண்பு ரீதியாகவும், அளவு ரீதியாகவும் பகுப்பாய்வு செய்யப்பட்டு எடுத்துக்கூறப்பட்டு இவ்வாய்வு நிறைவடைந்துள்ளது. இவ்வாய்வின் நோக்கம் கற்றல் வன நிலையங்களின் செயற்பாடுகளை வினைத்திறனாக்குவதே. ஆய்வு முடிவுகளின் படி கற்றல் வளநிலையங்கள் க.பொ.த (உ/த) மாணவர்களின் கற்றல் செயல்முறைகளில் வகுப்பறைக் கற்றலுக்கு மேலதிகமாக உதவக்கூடியது புதிய வழிகளையும், மாற்றுத் தீர்வுகளையும் நூல் வடிவிலோ, ஒளி, ஒலி காட்சி வடிவிலோ பெற்று சிந்தனை விருத்திக்கு உதவும். மாணவர்களின் புத்தாக்க சிந்தணைக்கும். சிக்கலான பிரச்சிணைகளுக்கு தீர்வு காண்பதற்கும் சிறப்பான பங்களிப்பை வழங்கவல்லது. அதன் முக்கியத்துவம் உணரப்படுமிடத்து மாணவர்கள் தமக்கு சாதகமான நேரங்களை ஒதுக்கி பல ஆராய்ச்சிகளில் ஈடுபடவும் வழிவகுப்பதுடன் அவர்களின் சுய கற்றல் பழக்கம் வாழ் நாள் நீடித்த பயனையும் தரும். மாணவர்கள் எதிர்கால சமூகம். அவர்களை நற்பிரஜைகளாக மாற்றியமைக்கும் சக்தி பாடசாலை கற்றல் வள நிலையத்திற்கு உண்டு, அதிலிருந்து பெறப்பட்ட அறிவுத் தேடல் சமூகத்தில் பிரதிபலிக்கும். எனவே பாடசாலை கற்றல் வள நிலையங்களை நவீன போக்குகளுக்கமைவாக உருவாக்குவதன் மூலம் கற்றல் தேடலை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தலாம். அவர்களின் சுய கற்றல் ஆற்றலை விருத்தி செய்யலாம்