Abstract:
ஆய்வுப் பிரதேசமான ஏறாவூர் பற்று மேற்கு கோட்டப் பாடசாலைகளில் கனிஷ்ட இடைநிலைப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் மெல்லக் கற்கும் மாணவர்களாகக் காணப்படுகின்றனர். மாணவர்கள் மெல்லக் கற்பவர்களாக இருப்பதற்கு பொருத்தமற்ற வீட்டுச் சூழலே பிரதான காரணமாக அமைகின்றது. ஆய்வினை மேற்கொள்வதற்காக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் ஏறாவூர் பற்று மேற்குக் கோட்டத்தில் காணப்படும் பாடசாலைகளிலிருந்து நோக்க மாதிரித் தெரிவின் அடிப்படையில் ஆறு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அப்பாடசாலைகளில் கனிஷ்ட இடைநிலைப் பிரிவில் கல்வி கற்கும் 274 மெல்லக் கற்கும் மாணவர்கள் ஆண், பெண் என படையாக்கப்பட்டு 21 எனும் விகிதத்தில் இலகு எழுமாற்று மாதிரித் தெரிவின் அடிப்படையில் 137 மாணவர்களும் நோக்க மாதிரித் தெரிவின் அடிப்படையில் ஆறு அதிபர்களும் கனிஷ்ட இடைநிலைப் பிரிவில் கற்பிக்கும் 97 ஆசிரியர்கள் ஆண்,பெண் என படையாக்கப்பட்டு 21 எனும் விகிதத்தின் அடிப்படையில் 49 ஆசிரியர்கள் இலகு எழுமாற்று மாதிரித் தெரிவின் அடிப்படையிலும் ஆய்வு மாதிரியாகத் தெரிவு செய்யப்பட்ட 137 மாணவர்களின் பெற்றோர்கள் படையாக்கப்பட்டு 3:1 எனும் விகிதத்தின் அடிப்படையில் இலகு எழுமாற்று மாதிரித் தெரிவின் அடிப்படையில் 45 பெற்றோர்கள் தெரிவு செய்யப்பட்டு தகவல்கள் பெறப்பட்டன. இதனடிப்படையில் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆய்வுக் குடித்தொகையினராக கருதப்பட்டு வினாக்கொத்து, நேர்காணல், ஆவணச் சான்றுகள், நேரடி அவதானம் போன்ற ஆய்வுக் கருவிகளைப் பயன்படுத்தி வினாக்கள் அளவு ரீதியாகவும், பண்பு ரீதியாகவும் வினவப்பட்டு பெறப்பட்ட தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு அட்டவணைகள், சலாகை வரைபுகள், வட்ட வரைபுகள் மூலம் காட்டப்பட்டுள்ளன. இதன் பின் முடிவுகளும் மெல்லக் கற்கும் மாணவர்களின் கற்றல் பிரச்சினைகளை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்பதற்கான போதியளவு வியாக்கியானமும் விதப்புரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன