Abstract:
இலங்கையின் கல்வித் துறையில் கல்வி பொதுதர சாதாரணதரம் பரீட்சை அடைவு மட்டம் முதன்மை பெறுகின்றது. ஆனால் மாணவர்கள் கல்வி பொது சாதாரண தரப் பரீட்சையில் ஏனைய பாடங்களை விட ஆங்கிலப் பாடம் சித்தியடையும் வீதம் குறைந்த மட்டத்தில் உள்ளது. இவ்வாறு ஆங்கிலப் பாடம் தொடர்பான அடைவு மட்டத்தில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளைக் கண்டறிந்து சிபார்சுகளை முன்வைப்பதற்காக இவ்வாய்வு முன்னெடுத்துச் செல்லப்பட்டது. மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்தின் மண்முனை தென்மேற்கு கோட்டத்தில் 1A8,10 பாடசாலைகள் ஐந்து தெரிவு செய்யப்பட்டு அளவைநிலை ஆய்வு மூலமும், பண்புநிலை ஆய்வு மூலமும் இலகு நோக்க மாதிரிகள் மூலம் ஆய்வுக்கான மாதிரிகள் தெரிவுசெய்யப்பட்டு வினாக்கொத்து, அவதானம் நேர்காணல், ஆவணங்கள் மூலமாக உரிய நபர்களிடமிருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு 1AB,1C பாடசாலைகளின் கல்வி பொதுதர சாதாரணதர, கல்வி பொதுதர உயர் தர முதலாம் தர மாணவர்களும் ஆங்கிலப்பாட அடைவு மட்டத்தில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் அடிப்படையில் விபரணகள ஆய்வாக கலப்பு முறையாய்வு பயன்படுத்தப்பட்டது. இவ்வாய்வில் பெறப்பட்ட முக்கியமான முடிவுகளாக கல்வி பொதுதர சாதாரணதரப் பரீட்சையில் ஆங்கிலப்பாட பெறுபேற்று மட்டத்தினை உயர்த்துவதற்கு ஆசிரியர் மாணவர இடைத்தொடர்பு ஆசிரியர்களின் கற்பித்தல் முறை உபகரணப் பயன்பாடு கற்பித்தல் நுட்பங்கள் நவின யுகத்திற்குப் பொருந்தத்தற்கதாக அமைதல் மாணவர்களின் சுய கற்றலை ஊக்குவித்தல் அதிபர்கள்,ஆசிரியர் பெற்றோர்கள் சமூகத்தவர் ஆகியோரின் பங்களிப்பு மிக இன்றியமையாதது என்பனவும் இவ்வாய்வு மூலம் பெறப்பட்டது