Abstract:
வெலிக்கந்தை கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இடைவிலகல் என்பது மிக நீண்ட காலம் தொட்டு இடம்பெறுகின்றது. இன்றைய காலகட்டத்தில் மாணவர் இடைவிலகல் என்பது உலகில் பாரிய SUIT GO உருவெடுத்துள்ளது. உளவியல்சார் பிரச்சினைகளுக்கு உள்ளாகும் சதவீதம் உயர்வாகக் காணப்படுகின்றமையினால் வழிகாட்டல் ஆலோசனை சேவையின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனடிப்படையில் வெலிக்கந்தை கல்விக்கோட்டத்து இடைநிலைப் பிரிவு மாணவர்களின் இடைவிலகலுக்கும் வழிகாட்டல் ஆலோசனை சேவைக்கும் இடையிலான தொடர்பு' எனும் ஆய்வுத் தலைப்பானது தெரிவு செய்யப்பட்டு மாணவர் இடைவிலகலுக்கான காரணங்களும், வழிகாட்டல் ஆலோசனை சேவையின் தேவையும் கண்டறியப்படுவதனை நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வாளது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இல் ஆய்வானது பொலனறுவை மாவட்டத்தில் உள்ள 03 கல்வி வலயங்களில் ஒன்றான திம்புலாகல கல்வி வலயத்தில் வெலிக்கந்தை கல்விக்கோட்டத்தில் காணப்படுகின்ற இடைநிலைப்பிரிவு பாடசாலைகளை மையமாகக் கொண்டு ωή ή πú H. & 1AB (03), 1C )05(, 26) 3 غوط (07) 2 غوط( फाक 41 பாடசாலைகளும் 412 ஆசிரியர்களும், 7697 மாணவர்களும் காணப்படுகின்றனர். ஆய்வுக்காக 06 பாடசாலைகள் வசதி மாதிரி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டதோடு இடைவிலகிய மாணவர்கள், ஆசிரியர்களில் இருந்து இலகு எழுமாற்று மாதிரித் தெரிவு மூலம் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டன. இங்கு 06 பாடசாலைகளிலும் 92 ஆசிரியர்களில் 2:1 எனும் விகிதத்தில் 47 மாதிரிகளும், 412 பேரும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். ஆய்வு வினாக்களினடிப்படையில் ஆய்வுக்கருவிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், ஆசிரியர்களிடம் வினாக்கொத்து மூலமும், அதிபர், ஆலோசகர்களிடம் நேர்காணல் மூலமும் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் ஆசிரியர்களிடம் வினாக்கொத்து மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டு அவை கலப்பு ஆய்வு அணுகு முறையிலேயே இவ் ஆய்வின் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அட்டவணை, உருக்கள் மூலம் விளக்கப்பட்டுள்ளதோடு, பகுப்பாய்வு நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் இடைவிலகலுக்கான காரணிகளான பெற்றோரின் அக்கறையின்மை, பொருளாதார கஸ்ரம், பெற்றோரின் குடிப்பழக்கம்,வெளிநாடு செல்லல், சிறுவர் தொழிலாளர்கள், இளவயது திருமணம், உடல் வளக் குறைபாடுகளும்,பாடசாலை சார்ந்த காரணிகளான வரவின்மை, ஆசிரியரின் பாரபட்சம், கற்றல் பின்னடைவு, வழிகாட்டல் ஆலோசனை சேவை தொடர்பில் ஆலோசனை இன்மை,சேவை கட்டமைக்கப்படாமை, அது தொடர்பான விழிப்புணர்வு இன்மைபோன்ற முடிவுகளும் அதற்கான விதந்துரைப்புக்களும் வழங்கப்பட்டுள்ளன. (ஆய்வாளன்)