Abstract:
ஒரு பாடசாலையின் வெற்றியானது அப்பாடசாலை பெறும் அடைவதளில் அடிப்படையிலே தீர்மானிக்கப்படுகின்றது. அந்தவகையிலே மாணவர்களில் பெறுபேற்றினை மேம்படுத்துவதில் பெற்றோர் அதிபர், ஆசிரியர்கள் சிழகம் போன்றவற்றில் ஒன்றிணைந்த பங்களிப்பு அவசியமானதாகும். இருந்த பொதும் மாணவர்கள் பொதுப் பரீட்சைகளில் சித்தி அடையும் விதம் குறிப்பிட்ட சி பாடங்களில் திருப்தியற்றதாகவே காணப்படுகிறது. எனவே இனியில் அரசறிவியல் பாட அடையில் செல்வாக்குச் செலுத்தம் குடும்பக் காரணிகளைக் கண்டறிந்து அதற்கான ஆலோசனைகளை முன்வைப்பதாக இை அமைகின்றது. இவ்வாய்யானது மணிமுனைப்பற்றுக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட TAB, IC பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு அளவை நிலையில் மேற்கொள்ளப்படும் ஆய்வாக அமைகின்றது. அந்தவகையிலே இக்கல்விக் கோட்டத்திலே மொத்தமாக 16 பாடசாலைகள் காணப்பட்ட போதிலும் ஆய்வுக்காக நோக்க மாதிரியின் அடிப்படையில் ஒரு IAB பாடசாலையும், நான்கு IC பாடசாலையும் ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்டன. அத்துடன் நான்கு பாடசாலைகளின் நான்கு அதிபர்களும் நோக்க மாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டதுடன், அப்பாடசாலையில் அரசறிவியல் பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்களும் நோக்க மாதிரிர்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டதுடன், இலகு எழுமாற்று மாதிரி அடிப்படையில் 2:1 என்ற விகிதத்தில் 100 மாணவர் தெரிவு செய்யப்பட்டதுடன், தெரிவு செய்யப்பட்ட 100 மாணவர்களின் 100 பெற்றோர்களும் நோக்க மாதிரியின் அடிப்படையில் ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாய்வுக்கான தரவுகள் நேர்காணல், வினாக்கொத்து, ஆவணங்கள் பரீசீலனை என்பவற்றின் மூலம் சேகரிக்கப்பட்டு Ms Excel ஊடக பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன. அந்தவகையிலே உபொ.த (உ/த) அரசறிவியல் பாட அடைவில் செல்வாக்குச் செலுத்தும் குடும்பக் காரணிகளாக மாணவர்களின் வீட்டுச் சூழல், கற்றலுக்கான வசதி வாய்ப்புகள், பெற்றோர்களின் பொருளாதார நிலை, பெற்றோர்களின் கல்வி மட்டம், பெற்றோர் பாடசாலை தொடர்பு, மாணவர்களின் சுய கற்றல் போன்ற விடயங்கள் மாணவர்களின் அடையில் செல்வாக்குச் செலுத்துவதனை அறிய முடிகின்றது. இவ்விடயங்கள் திருப்திகரமாக காணப்படும் போது அரசறிவியல் பாட அடைவினை உயர்த்த முடியும் எனும் முடிவினைக் கண்டு அதற்கான விதந்துரைப்புகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.