Abstract:
புலமைப்பரிசில்சுற்றல் அடைவில் செல்வாக்கும் செலுத்தும் காரணிகளைக் கண்டறிதல் எனும் தலைப்பில் யபெறும் இவ்வாய்வாளது போரதீவுப்பற்றுக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பாலகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. இப்பிரதேசப் பாடசாலைகளிலே புலமைப்பரிசில் ஸ்ரீட்சையில் மாணவர்கள் பெறுகின்ற அடைவானது மிகவும் தாழ்நிலையில் காணப்படுகின்றது. இவ் அடையினை உயர்த்தும் தோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்விற்கென 10 பாடசாலைகள் வசதி மாதிரித் தெரிவின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளன. பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டமைக்கு அமைவாக அதிபர்கள் நோக்கமாதிரி அடிப்படையிலும், ஆரம்பக்கல்வி கற்பிக்கும் 64 ஆசிரியர்களும் நோக்கமாதிரி அடிப்படையிலும், தரம் ஐந்தில் கல்வி கற்கும் 218 மாணவர்களும் ஆண், பெண் என படையாக்கப்பட்டு 4:1 எனும் விகிதத்தில் இலகு எழுமாற்று மாதிரித் தெரிவின் அடிப்படையில் 55 மாணவர்களும், ஆய்வு மாதிரியாகத் தெரிவு செய்யப்பட்ட 55 மாணவர்களின் பெற்றோர்கள் நோக்கமாதிரித் தெரிவின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டனர். ஆய்விற்கான தரவுசேகரித்தல் கருவிகளாக வினாக்கொத்து, நேர்காணல், ஆவணங்கள் ஆகியன பயன்படுத்தப்பட்டன. இவற்றின் மூலமாகப்பெறப்பட்ட அளவுசார் மற்றும் பண்புசார் தரவுகள் Microsoft Excel மென்பொருளினூடாகப் பகுப்பாய்வு செய்யப்பட்டு அட்டவணைகள், சலாகை வரைபுகள், வட்ட வரைபுகள் மூலம் காட்டப்பட்டுள்ளன. பகுப்பாய்வு மூலம் பல்வேறு முடிவுகள் கண்டறியப்பட்டது. போரதீவுக் கல்விக்கோட்டத்திலே புலமைப்பரிசில் பரீட்சை அடைவினை உயர்த்துவதில் குடும்பம்சார் காரணிகள், பாடசாலைசார் காரணிகள், மாணவர்சார் காரணிகள் எனப் பல்வேறுபட்ட காரணிகள் தாக்கத்தினைச் செலுத்துகின்றது. இத்தாக்கமானது பாடசாலைகளின் கற்றல் அடைவிலும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது எனக்கண்டறியப்பட்டதோடு, இது தொடர்பில் LISO பிரச்சினைகளும் இனங்காணப்பட்டு, இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விதப்புரைகளும் இவ்வாய்வினூடாக முன்வைக்கப்பட்டுள்ளன.