Abstract:
இலங்கையில் அனைவருக்கும் கல்வியை உறுதி செய்வதற்கு விசேட தேவையுடைய மாணவர்களுக்கு தரமான கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை நிச்சயப்படுத்திக் கொள்வது தற்காலத்தினுடைய ஒரு அத்தியாவசியம் தேரையாக உள்ளது. இருப்பினும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட பாட்சா காணப்படும் நீசேட தேவை அலருகளில் கல்வி கற்கும் விசேட தேவையுடைய மாணவர் கல்வி மேம்பாடானது கிழக்கு மாகாணத்திலுள்ள மற்றைய மாவட்டங்டிலோடு ஒப்பிடுகையி தாழ்நிலையில் உள்ளது. இதனை எடுத்தியம்புவதாக "விசேட தேவை அங்கிழங்கு மாணவர்களது கல்வியை மேம்படுத்துவதில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்" எனும் தலைப்பிலான இவ் அளவை நிலை ஆய்வானது விசேட தேவை அலகுகளிலுள்ள விசேட தேவையுடைய மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் விசேட தேவை அலகுகளை உடைய ஆறு TAB, 12 IC. இரண்டு வகை 11. ஒரு வகை !!! பாடசாலைகளின் அதிபர்கள் (21), விசேட தேவை அலகிற்கான ஆசிரியர்கள் (20. நன்னார்வலர்கள் (25), விசேட தேவையுடைய மாணவர்கள் (143), அவர்களின் பெற்றோர்கள் (143), விசேட தேவை அலகிற்கான சேவைக்கால ஆலோசகர்கள் (5) போன்றோரை நோக்க மாதிரியினூடாகத் தெரிவு செய்து வினாக்கொத்து, நேர்காணல், அவதானம், ஆவணம் மூலமாக அவர்களிடமிருந்து அளவு மற்றும் பண்பு ரீதியாக தரவுகள் பெறப்பட்டுள்ளன. இவை எண் சதவீத அளவீட்டு முறையில் பருப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. சேகரிக்கப்பட்ட தரவுகள் யாவும் விசேட தேவை அலகிலுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் பற்றி அறிதல், செயற்பாடுகளை மதிப்பிடல், கற்பிப்பதில் அவர்களுக்கான நற்பித்தல் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், அவற்றைக் குறைப்பதற்கான வழிமுறைகளும் போன்ற ஆய்வு நோக்கத்தின் அடிப்படையில் அளவு, பண்பு ரீதியாகப் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகளான ஆய்வுப்பிரதேசத்தில் 143 விசேட தேவை கொண்டட் மாணவர்களில் 23% ஆனவர்கள் மனவளர்ச்சிக் குறைபாட்டாலும், 14% ஆனவர்கள் டவுண் சகசத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர், விசேட தேவை அலகிலுள்ள 90% ஆன ஆசிரியர்கள் விசேட தேவைக் கல்வி தொடர்பான மிகக் குறைந்த கல்வித் தகைமையோடு காணப்படுகின்றனர், விசேட தேவையுடைய மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதில் பாடசாலை, பெற்றோர், கலைத்திட்ட, சமூகம் சார் காரணிகள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன போன்ற முடிவுகளுக்கு விசேட தேவையுடைய மாணவர்களுக்குத் தேவையான பாடசாலை, வகுப்பறைச் சூழல், தகுதியுடைய ஆசிரியர்கள், பிரத்தியேக கலைத்திட்டம், நேரான மனப்பாங்கு கொண்ட சமூகம் போன்றவற்றை ஏற்படுத்துவதினூடாக இப்பிரச்சினைகளைக் குறைக்கலாம் போன்ற விதப்புரைகளும் இவ்வாய்வில் வழங்கப்பட்டுள்ளன.