Abstract:
விஞ்ஞகளக் கல்வி பல்துறைகளிலும் செல்வாக்குச் செலுத்துகின்றது. சமுக முன்னேற்றத்திற்கும் எதிர்காலத்தில் எதிர்கொள்ளலிதரும் சிக்கலான பிரளைத் தீர்ப்பதற்கும் விஞ்ஞான அறிவானது இன்றியமையாததாக காணப்படுகின்றது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த விஞ்ஞானக் கல்வியை மாணவர்கள் செய்முறையிலூடாகக் கற்பதற்கு ஆர்வத்தினை ஏற்படுத்துவது ஆசிரியர்களின் தலையாய கடமையாகும் அந்த கையில் இல்ஆய்வின் முக்கிய நோக்கமாக தரம் 10, 11 விஞ்ஞாள பாடத்திட்டத்தில் உள்ள பரிசோதனைகளைச் செய்முறை கற்றல் மூலம் மேற்கொள்வதற்குத் தடையாக உள்ள காரணிகளை இவங்கண்டு, செய்முறைக் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கும், விஞ்ஞாளப் பாடஅடைவு மட்டத்தை அதிகரிப்பதற்குமான ஆலோசனைகனை முன்வைப்பதாகவும் அமைகின்றது. அந்த வகையில் ஆய்வு பிரதேசமாக சம்மாந்துறைக் கல்வி வலையத்தில் சம்மாந்துறைக் கல்விக் கோட்டத்தில் தரம் 11 வரை வகுப்புகளைக் கொண்ட 12 பாடசாலைகளில் இருந்து படையாக்கப்பட்டு தோக்க மாதிரி அடிப்படையில் 04 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அப்பாடசாலைகளில் உள்ள தரம் 11 இல் கல்வி பயிலும் 471 மாணவர்களில் 120 மாணவர்கள் படையாக்கப்பட்ட இலகு எழுமாற்று மாதிரி எடுப்பினூடாகவும், அவர்களுக்கு தரம் 10, 11 இல் விஞ்ஞானம் கற்பிக்கும் 24 ஆசிரியர்கள் மற்றும் நான்கு ஆய்வுப் பாடசாலைகளின் அதிபர்களும் நோக்கம் மாதிரி அடிப்படையில் நெரிவு செய்யப்பட்டனர்.தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களிடமிருந்து வினாக்கொத்து மூலமும், அதிபர்களிடமிருந்து நேர்முகங்காணல் மூலமாகவும். ஆவணங்களில் இருந்தும் தரவுகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. சேகரிக்கப்பட்ட தரவுகள் யாவும் விஞ்ஞானப் பாட அடைவை இனங்காணல், செய்முறைக் கற்றலில் மாணவர்களின் ஈடுபாடு. செய்முறைக் கற்றலுக்கும் விஞ்ஞானப் பாடஅடைவிற்கும் இடையிலான தொடர்பு. செய்முறைக் கற்றலை முன்னெடுப்பதில் உள்ள சவால்கள், செய்முறைக் கற்றலை வினைத்திறனாக்கி விஞ்ஞானப் பாட அடைவை அதிகரிப்பதற்கான ஆலோசனைகள் ஆகிய ஐந்து ஆய்வு நோக்கங்களின் அடிப்படையில் அளவு ரீதியாக இடை, நியமவிலகல் கணிக்கப்பட்டும். பண்பு ரீதியாகவும் பகுப்பாய்வு செய்யப்பட்டு அவை புள்ளி விபர ரீதியாகவும் Column Chart மூலமாகவும், அட்டவணைகள் மூலமாகவும் விளக்கப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவுகளாக விஞ்ஞானப் பாடச் சித்திச் சதவீதம் உயர்வாக இருப்பதுடன் அதி விசேட, விசேட சித்தி பெறுவது குறைவாகக் காணப்படுவதோடு விஞ்ஞானப் பாடம் கற்பதற்கான ஆர்வம் சராசரி மட்டத்திலும், மாணவர்கள் விஞ்ஞானப் பாடத்தை கடின பாடமாகவும் கருதுகின்றனர். பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் செய்முறைகளின் அளவு சாதாரண நிலையிலும், தனித்தனியாகச் செய்முறைகளில் ஈடுபடுவது குறைவாகவும், மாணவர்கள் விஞ்ஞான ஆய்வுகூட உபகரணங்களை இனங்கண்டு கையாளும் தன்மை சாதாரண மட்டத்திலும், செய்முறை கற்றலை முன்னெடுப்பதற்கு வளங்களின் பற்றாக்குறை காணப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது