Abstract:
இன்றைய பொதுக் கல்வியின் நோக்கத்தை பூரணமாக அடையப்படவேண்டுமாயின் மாணவர்களுக்கு செயற்பாட்டுக் கல்வியை வழங்குவது மிக முக்கியமாகும் அந்தவகையில் உடற்கல்வியின் பங்கு அளப்பெரியதாகக் காணப்படுகின்றதௌலாம். விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் பங்குபற்றுதலிலும் தேசிய மட்டத்தில் வெற்றிகளை அதிகரிப்பதிலும் உள்ள சவால்கள். மட்டக்களப்பு கல்விவலயந்தில் மண்முனை வடக்கு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட 1AB பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு). பல்வேறு சவால்களின் மத்தியில் இப்பிரதேசப் மாணவர்கள் பங்குபற்றுதலிலும் தேசிய மட்டத்தில் வெற்றிகளை அதிகரிப்பதிலும் பின்தங்கிய நிலை தோன்றுகின்றது. இதனடிப்படையிலேயே விளையாட்டுக்களில் பல்வேறு சவால்கள் மாணவர்களின் தேசிய மட்ட வெற்றிகளை அதிகரிப்பதில் ஏற்படுத்தும் தாக்கத்தை கண்டறிதல் எனும் ஆய்வு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வானது மண்முனை வடக்கு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட 1A8, பாடசாலைகளினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்விற்காக ஆய்வு மாதிரிகளாக அதிபர், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பயிற்றுவிப்பாளர்கள் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாய்விற்கென தெரிவு செய்யப்பட்ட எட்டு 1AB வகைப் பாடசாலைகள் நோக்க மாதிரித் தெரிவின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளன. பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டமைக்கு அமைவாக அதிபர்களும் தெரிவு செய்யப்பட்டனர். ஆசிரியர்களும், மாணவர்களும், பயிற்றுவிப்பாளர்கள், பெற்றோர்களும் படிமுறையாக்கப்பட்ட மாதிரி மூலம் தெரிவு செய்யப்பட்டு பின்பு எளிய எழுமாற்று மாதிரித் தெரிவின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டது. ஆய்விற்கான தரவுசேகரித்தல் கருவிகளாக வினாக்கொத்து, நேர்காணல்,இலக்குகுழு கலந்துரையாடல் மற்றும் அவதானம் போன்றன பயன்படுத்தப்பட்டன. இவற்றின் மூலமாகப்பெறப்பட்ட தரவுகள் அளவுசார் மற்றும் பண்புசார் தரவுகள் பொருத்தமான மென்பொருள் முறைகளினூடாக பகுப்பாய்வு, வியாக்கியானம், கலந்துரையாடல் செய்யப்பட்டு பகுப்பாய்வு மூலம் பல்வேறு முடிவுகள் கண்டறியப்படுகின்றன. மண்முனை வடக்கு கோட்டத்திலே தேசிய மட்ட விளையாட்டுக்களில் வெற்றி பெறுவதில் பல்வேறு சவால்கள் பாரிய தாக்கத்தினைச் செலுத்துகின்றது.தேசியமட்ட விளையாட்டுக்களில் இவ்வாறான சவால்கள் பாடசாலையின் விளையாட்டுக்களில் குறித்த இலக்கினை அடையமுடியாமை எனக் கண்டறியப்பட்டதோடு. அவற்றை குறைப்பதற்கான விதப்புரைகளும் ஆய்வினூடாக முன்வைக்கப்பட்டுள்ளன