dc.description.abstract |
க.பொ.த (சா/த) மாணவர்களின் விஞ்ஞான பாடஅடைவை அதிகரிப்பதில் விஞ்ஞான ஆய்வுகூடப் பயன்பாடு செல்வாக்கு செலுத்துகிறது. எமது நாட்டின் பாடசாலைகளின் பொதுப் பரிட்சைகளில் ஏனையவற்றுடன் ஒப்பிடும்போது க.பொ.த (சா/த)ப் பரிட்சையானது க.பொ.த உயர்தரக் கல்வியை தொடரவும் அத்துறை சார்ந்த தொழில் வாய்ப்புக்களை பெறுவதற்கான தகைமைச் சித்தியை பெறவும் பெரும் பங்காற்றுகின்றது. அந்தவகையில் ஆய்வுப் பிரதேசமான மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர்ப்பற்று-1 கோட்டத்திலுள்ள க.பொ.த.(சா/த) மாணவர்களின் விஞ்ஞான பாட அடைவு குறைவதன் காரணமாக க.பொ.த உயர்தரத்தில் விஞ்ஞான, கணித தொழினுட்பபிரிவுகளில் கல்வி கற்கும் வாய்ப்புக்களை பெற்றுகொள்வதில் இடர்படுகின்றனர். இவ்வாய்வின் முக்கிய நோக்கம் க.பொ.த (சா/த) மாணவர்களின் விஞ்ஞான பாடஅடைவை அதிகரிப்பதில் விஞ்ஞான ஆய்வுகூடப் பயன்பாட்டின் செல்வாக்கினை கண்டறிந்து மேம்படுத்துவதற்கான விதப்புரைகளை முன்மொழிவதாகும். ஏறாவூர்ப்பற்று- கோட்டத்திலுள்ள 8 பாடசாலைகளிலுள்ள 141 மாணவர்களும் எளிய எழுமாற்று மாதிரி தெரிவு முறையிலும் அதிபர்களும் 11 விஞ்ஞானபாட ஆசிரியர்களும் 2 விஞ்ஞானபாட ஆசிரிய ஆலோசகர்களும் நோக்க மாதிரியாக தெரிவுசெய்யப்பட்டனர். மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோருக்கு வினாக்கொத்து வழங்கப்பட்டும் விஞ்ஞானபாட ஆசிரிய ஆலோசகர்களிடம் நேர்காணல் மூலமும், ஆய்வாளனால் அவதானிப்புபடிவம் மூலம் நேரடியாக அவதாளிக்கப்பட்டும் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. விஞ்ஞான பாட அடைவு மட்ட வீழ்ச்சிக்கான காரணங்கள், விஞ்ஞான பாட கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் ஆய்வுகூடத்தை பயன்படுத்துவதன் முக்கியத்துவம், விஞ்ஞான ஆய்வுகூடத்தை பயன்படுத்தாமைக்கான காரணங்கள், இவற்றுக்கான தீர்வுகள் என்பன ஆய்வு நோக்கத்தின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்பட்டன. இங்கு தரவுகள் அளவுரீதியாகவும் பண்புரீதியாகவும் பகுப்பாய்வு செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இவ் ஆய்வினுாடாக மாணவர்கள் விஞ்ஞான பாடத்தினை கற்பதற்கான ஆர்வமானது 45% என்பதும் 37% ஆன மாணவர்களே விஞ்ஞான பாடம் கற்பதன் முக்கியத்துவத்தை அறிந்துள்ளார்கள், விரிவுரையுடன் கூடிய செய்துகாட்டல் முறை கற்பித்தல் முறை 646 ஆன ஆசிரியர்களால் பயன்படுத்தப்படுகிறது எனவும் விஞ்ஞான ஆய்வுகூடம் அல்லது விஞ்ஞான அறையானது விஞ்ஞான பாட கற்றல் கற்பித்தல் செயன்முறையில் பயன்படுத்தப்படுவதாக மாணவர்களில் 48% ஆனோரே தெரிவித்ததுடன் ஆய்வுகூடங்களில் போதுமானளவு செயற்பாடுகளுக்கு தேவையான இரசாயனப் பொருட்களும் ஆய்வுகூட உபகரணங்கள் காணப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. |
en_US |