dc.contributor.author |
நித்தியப்பிரியா, சதீஸ்குமார் |
|
dc.date.accessioned |
2024-03-11T09:33:31Z |
|
dc.date.available |
2024-03-11T09:33:31Z |
|
dc.date.issued |
2023 |
|
dc.identifier.citation |
MED344 |
en_US |
dc.identifier.uri |
http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15110 |
|
dc.description.abstract |
நாட்டின் கல்வி அடைவை விருத்தி செய்யும் வகையில் இலங்கை அரசாங்கம் காலத்திற்குக் காலம் பல்லேறு நிகழ்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டமானது அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வியை வழங்கும் நோக்கில் அறிமுகப்படுத்திய திட்டமே ஆகும். இந் நிகழ்ச்சித் திட்டத்தை பாடசாலையின் முழு அபிவிருத்திக்குமாக நடைமுறைப்படுத்துகையில் அதிபர்கள் பல்வேறு சவால்களை எதிர் கொள்கின்றனர். இப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு "பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகையில் அதிபர் எதிர்நோக்கும் சவால்கள்" எனும் தலைப்பில் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாய்வானது கல்குடா கல்வி வலயத்தின் கோறளைப்பற்றுக் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. தெரிவு செய்யப்பட்ட ஐந்து பாடசாலைகளிலிருந்து அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதிபர்கள் ஐந்து பேரும் நோக்க மாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள்(65). மாணவர்கள் (295) பெற்றோர்(29) இலகு எழுமாற்று மாதிரித் தெரிவின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டக் குழுவிலுள்ள பழைய மாணவர்கள் 10 பேரும் நோக்க மாதிரி அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆய்விற்காக தரவு சேகரித்தல் கருவிகளாக வினாக்கொத்து, நேர்காணல்,ஆவணம் ஆகியன பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாகப் பெறப்பட்ட அளவறிசார் தரவுகள் Excel மூலமாகவும் பண்பறிசார் தரவுகளும் வியாக்கியானம் செய்யப்பட்டு பெறுபேறுகளும் முடிவுகளும் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாய்வின் மூலம் பெறப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் பாடசாலை மேம்பாட்டுத் திட்டம் பற்றி பாடசாலைச் சமூகத்திற்குப் பூரண விளக்கமின்மை, இத் திட்டத்தை அதிபர் நடைமுறைப்படுத்துவதற்குப் பாடசாலை அபிவிருத்திக் குழு, முகாமைத்துவக் குழுவின் வினைத்திறனற்ற செயற்பாடுகள், ஆசிரியர்கள், மாணவர்கள். பெற்றோர். பழைய மாணவர்களின் ஒத்துழைப்பின்மை ஆகியன கண்டறியப்பட்டன. ஆய்வின்படி பாடசாலை மேம்பாட்டுத் திட்டத்தை அதிபர் வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் விதப்புரைகள் கூறப்பட்டுள்ளன. |
en_US |
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka |
en_US |
dc.subject |
பாடசாலை மேம்பாட்டுத் திட்டம் குழு |
en_US |
dc.subject |
பாடசாலை முகாமைத்துவக் குழு |
en_US |
dc.subject |
பாடசாலை அபிவிருத்திக் குழு |
en_US |
dc.subject |
பாடசாலை மட்ட ஆசிரியர் அபிவிருத்தி |
en_US |
dc.title |
பாடசாலை மேம்பாட்டு நிதழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அதிபர் எதிர்கொள்ளும் சவால்கள் |
en_US |
dc.type |
Thesis |
en_US |