Abstract:
"பாடசாலைகளின் பணிபுத்தர விருத்தியில் பெற்றோரின் பங்களிப்பு" எனும் ஆய்வானது அம்பாரை மாவட்டத்தில் சம்மாந்துறை கல்வி வலயத்தில் நாவிதனவெளி கோட்டன் பாடராலைகளை கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது ஆய்வுப் பீரதேசத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றன. இந்நிலையை செய்வதற்கு பெற்றோர் எந்தளவு பங்களிப்பைச் செலுத்துகின்றனர் என்பதை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு செய்யப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் காணப்படும் பாடசாலைகள் அதிகஷ்ட பாடசாலைகளாகவும் காணப்படுகின்றது ஆய்வுப் பிரதேசத்தில் மாத்திரமல்லாது நாடெங்கிலுமுள்ள அதிகஷ்ட, கஷ்ட பாடசாலைகளில் பாடசாலை முறைமையில் முக்கிய எழுவிளாவாக விளங்குகின்றது. இதனால் இவ்வெழுவிலாவானது ஆய்வுக்குட்படுத்த தீர்மானிக்கப்பட்டது.இவ்வாய்வறிக்கை ஐந்து அத்தியாயங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலாவது அத்தியாயம் ஆய்வினுடைய அறிமுகமாகும். இரண்டாவது இலக்கிய மீளாய்வு அத்தியாயமாகும், மூன்றாவது ஆய்வு முறையியலும் நான்காம் அத்தியாயம் தரவுகளின் பகுப்பாய்வும், ஐந்தாவது அந்தியாயத்தில் முடிவுகளும் விதத்துரைப்புக்களையும் உள்ளடக்கியுள்ளளதுடன் உசாத்துணைகளும் பிள்ளிணைப்புக்களும் இவ் அறிக்கையின் பிற்சேர்க்கையாக அமைந்துள்ளன.பாடசாலைகளின் பண்புத்தர விருந்தியில் பெற்றோரின் பங்களிப்பு தொழிற்பாட்டு ரீதியிலான விடயங்களை காரணகாரிய அடிப்படையில் கண்டறிய முயற்சிக்கப்பட்டுள்ளதுடன் பெற்றோரின் பங்களிப்பை அதிகரிப்பதற்குரிய வழிவகைகளையும் ஆராயமுற்படுகின்றது. இலக்கிய மீளாய்வில் பாடசாலைகளின் மேம்பாடு, பெற்றோர் பங்களிப்பு பற்றிய கோட்பாட்டு அடிப்படைகள், பெற்றோரை உள்வாங்குதற்குரிய முன்ளைய ஆய்வுகள் பற்றிய விபரங்களை விளக்குகின்றது. குறிப்பாக பெற்றோாரை உள்வாங்குவதில் செல்வாக்குச் செலுத்தும் பாடசாலை சார்ந்த காரணிகள், சமூக - பொருளததார காரணிகளுடன் தொடப்புடைய உள்நாட்டு சர்வதேச ஆய்வுகளின் கண்டறிதல்களும் முடிவுகளும் தரப்பட்டுள்ளன.இவ்வாய்வின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள பகுப்பாய்வுகளின் படி இப்பாடசாலைகளில் பெற்றோர் பங்களிப்புக்கள் குறைந்த மட்டத்தில் காணப்படுவதுடன் அவர்களை பாடசாலைமேம்பாட்டில் உள்வாங்குவதற்கான பொறிமுறைகளும் நலிவான நிலையில் காணப்படுகின்றமையும் அடையாளம் காணப்பட்டுள்ளன