dc.description.abstract |
கல்லியில்விகளை அளீடு செய்கின்ற முக்கிய குறிகாட்டிகளில் ஒன்றாக அடைவு பட்டம் காணப்படுகின்றது. குறிப்பாக மை பட்டம், கபொத அந்திபாரமாகவும் வேலை உற்குதா அடிப்படையாகவும் அமைகின்றது. இந்தகைய அடைவு மட்டத்தில் பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்தினாலும் ஆசிரியர்சார் காரணிகள் முக்கியமானதாகும்அறில் ஆசிரியர்களின் வகுப்பறைக்கான வரவு ஒழுங்கு மிக முக்கியமானதாகும். அவகையில் ஆசிரியர்களின் வரவினை மேம்படுத்துவதற்கான உபாயங்களைக் கையா மாணவர்களின் உபொத(சா/த) பரீட்சை அடைவு மட்டத்தை உயர்த்துதல் என்னும் நோக்கோடு, அதனை அடைவதற்கான பொருத்தமான ஆலோசனைகமை முன்னலக்கும் வகையில் நான்கு சிறப்பு நோக்கங்களுடன் இவ்வாய்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாய்வுக்காக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மணிமுனை வடக்கு கல்விக் கோட்டத்திலுள்ள தரம் 11 வரைக்குமான வகுப்புக்களைக் கொண்ட வகை !! பாடசாலைகளில் 10 பாடசாலைகள் வசதிமாதிரியாக தெரிவு செய்யப்பட்டன. க.பொ.த.(சா/த) 2021 (2022) இற்கு தோற்றிய 62 மாணவர்களும், சிரேஷ்ட இடைநிலை வகுப்புகளுக்கு கற்பிக்கும் 54 ஆசிரியர்களும், இலகு ழுமாற்று மாதிரி தெரிவு மூலமும் 10 அதிபர்கள் நோக்கமாதிரிகளாகவும் தெரிவு செய்யப்பட்டனர். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோருக்கு வினாக்கொத்தினையும், மற்றும் அதிபர்களிடத்து நேர்காணல் மூலமும் ஆவணங்களிலுள்ள தரவுகளும் பெறப்பட்டு, தொகைசார்ந்த மற்றும் பன்புசார்ந்த கலப்புநிலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்பொருட்டு இணைவுக்குணகம் T-test அனுமான புள்ளிவிபரவியல் அடிப்படையில் SPSS மென்பொருட்களைப் பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
க.பொ.த.(சா/த) அடைவு மட்டத்தில் ஆசிரியர்களின் வரவு ஒழுங்கீனம் செல்வாக்குச் செலுத்துகின்றது என்பதனை தரவுப் பகுப்பாய்வுடன் அறியலாம். க.பொ.த.(சா/த) மாணவர்களின் பாடஅடைவு மட்டம் தொடர்பான பிரச்சினைக்கு ஆசிரியர்கள் புதிய கற்பித்தல் உத்திகளைக் கையாண்டு கற்பித்தல், தொடர்ச்சியான கற்றல் கற்பித்தல் செயன்முறையை முன்னெடுக்கக்கூடிய வகையில் ஆசிரியர், மாணவர் வரவினை ஒழுங்குபடுத்தல், பரிகாரக் கற்பித்தல் வேலைத்திட்டங்களை முன்வைத்தல் என்பன தீர்வாகவும், ஆசிரியர்களின் வரவு ஒழுங்கீனம் தொடர்பான பிரச்சினைக்கு பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட ஆசிரியர் வாண்மைத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் (SBPTD) மூலம் வாண்மைத்துவமிக்க ஆசிரியர் சமூகத்தை கட்டியெழுப்புதல், லீவினை குறைவாக பெறும் ஆசிரியர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்களை வழங்குதல், நிகழ்நிலை மூலம் கற்பிப்பதற்கான நடைமுறைகளை பாடசாலை மட்டத்தில் முன்னெடுத்தல் என்பன பரிந்துரைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன |
en_US |