Abstract:
க.பொ.த (உ/த) பிரிவுகளுன் மிக முக்கியமானதொரு துறையாக விஞ்ஞாலப் பிரிவு காணப்படுகின்றது.இப்பிரிவில் கற்கும் மாணவர்களின் வழக்கமான கற்றல் முறைகளின் காரணமாக அவர்களின் சுயகற்றலின் வினைத்திறன் குறைவடைந்து பரீட்சை அடைவுகளிலும் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதனை பெறுபேறுகளின் அடிப்படையில் காணமுடிகின்றது அந்த அடிப்படையில் இவ்வாய்வானது, பாடசாலையின் உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவர்கள் பயன்படுத்தும் தொலைக் கல்வி முறைகளை இனங்கண்டு அதனூடாக சுய நடைமுறைப்படுத்துவதற்காக கற்றலினை அதனைப் பிரயோகிக்கும் மேம்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டுள்ளது. அளவுசார் வினைத்திறனாக முறையினையும் பண்புசார் ஆகிய அனுகுமுறைகள் இரண்டினையும் கொண்ட அளவைநிலை ஆய்வாக இவ்வாய்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆய்வுப்பிரதேசமான அக்கரைப்பற்றுக் கல்வி வலயத்திலுள்ள ஒன்பது 1AB பாடசாலைகளில் க.பொ.த (உ/த) விஞ்ஞானப் பிரிவின் 2023 இல பரீட்சையினை எதிர்கொள்ளயுள்ள 52 மாணவர்களும், அவர்களின் 52. பெற்றோர்களும், அவர்களுக்குக் கற்பிக்கும் அனைத்து (44) ஆசிரியர்களும்.08 கல்வியதிகாரிகளும் மாதிரிகளாய்த் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வினாக்கொத்து, நேர்காணல் மூலமாக தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதுடன் விபரணப் புள்ளி விபரவியல் முறையில் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன ஆய்வு முடிவுகளிலிருந்து,மாணவர்கள் சுயகற்றலினை தொலைக்கல்வியினூடாக முன்னெடுப்பதற்குத் தேவையான தொழில்நுட்பவசதிகள், கற்றல் உபகரணங்கள், வழிகாட்டல் என்பன குறைவாகளே கிடைக்கப்பெறுகின்றது.அதேவேளை, பெற்றோர்களுக்குத் தொலைக்கல்வி மூலமாக தம் பிள்ளைகள் கற்றலைத் தொடரவதில் இணையப் பாதுகாப்புத் தொடர்பான சிறு அச்சமும் காணப்படுகின்றது.மேலும், ஆசிரியர்களுக்கு நவீன தொலைக்கல்வி முறைகளைப் பயன்படுத்திக் கற்பிப்பதற்கு ஏற்ற போதிய பயிற்சிகள் கிடைக்கவில்லை என்பதும் தெளிவாகின்றது. எனவே,இவற்றை நிவர்த்தி செய்யும் முகமாக பின்வரும் விதந்துரைகள் முன்வைக்கப்படுகின்றன. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் போதிய இலத்திரனியல் உபகரண வசதிகள் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகள் வாணமைத்துவ ரீதியாக வழங்கப்படுவதற்கு ஏற்ற வகையிலான வசதிகள் உயர் மட்ட அதிகாரிகளால் வழங்கப்படுதல் வேண்டும் என்பதோடு இணையத்தினைப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்தி தொலைக்கல்வியின் சுயகற்றல் ஊடாக முன்னெடுப்பதற்கான விழிப்புணர்வினை மாணவர்களுக்கும் செயன்முறையை ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பாடசாலை மட்டத்தில் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் கலவி அதிகாரிகளால் முன்னெடுக்கப்படுதல் அவசியமாகும்.