dc.description.abstract |
க.பொ.த(சா/த) பரீட்சையை முடித்தவர்களிடையே அதிக தோல்விகள் காணப்படுவதைக் கருத்தில் கொண்டு கற்றல் கற்பித்தல் செயல்முறையின் விளைவு குறித்து பல சிக்கல்கள் எழுந்துள்ளன. எனவே கற்றல், கற்பித்தலை நேரடியாகப் பாதிக்கும் முக்கிய காரணியாக வகுப்பறை முகாமைத்துவம் காணப்படுவதால் இவ் வகுப்பு ஆசிரியர்களின் முன்னோக்குகளையும் அவர்கள் வகுப்பறை முகாமையைப் பேணுவதில் எதிர்கொள்ளும் சவால்களையும் ஆய்வு செய்ய இந்த ஆய்வில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக கல்முனைக் கல்வி மாவட்டத்தில் சம்மாந்துறை கல்வி வலய சம்மாந்துறைக் கல்விக் கோட்டத்திலுள்ள IAB, IC, வகை II பாடசாலைகள் என எல்லாமாக 6 பாடசாலைகளின் அதிபர்கள், க.பொ.த (சா/த) கட்டாய பாடங்களுக்குரிய 6 ஆசிரிய ஆலோசகர்கள் நோக்க மாதிரியின் அடிப்படையிலும் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளின் ஆசிரியர்கள், படையாக்கப்பட்ட எழுமாற்று மாதிரி மூலமும்,மாணவர்கள் படிமுறை எழுமாற்று மாதிரி மூலமும் மாதிரித் தெரிவாக தெரிவு செய்யப்பட்டு, வினாக்கொத்து, நேர்காணல், அவதானம் மூலம் பல தரவுகள் சேகரிக்கப்பட்டு எண் சதவீத அளவீட்டு முறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. சேகரிக்கப்பட்ட தரவுகள் யாவும் க.பொ.த (சா/த) மாணவர்களின் வகுப்பறைகளில் தற்போது நிலவுகின்ற வகுப்பறை முகாமைத்துவப் பாங்குகள், மாணவர்களின் வகுப்பறைக் கற்றல்-கற்பித்தலில் வளங்கள், மாணவர்களின் கற்றல்-கற்பித்தலை மேம்பாடடையச் செய்வதற்கு ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், சவால்களைத் தீர்ப்பதற்குக் கையாண்ட உபாயங்கள். வகுப்பறை முகாமைத்துவத்தினூடாக கற்றல், கற்பித்தலை விளைதிறனுடையதாக்க உதவும் வழிவகைகள் போன்ற ஆய்வு நோக்கத்தின் அடிப்படையில் பண்பு ரீதியாகவும், அளவு ரீதியாகவும் பகுப்பாய்வு செய்யப்பட்டு எடுத்துக்கூறப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகளிலிருந்து மாணவர்கள் வகுப்பறையில் அதிக நெகிழ்ச்சி அதிக கட்டுப்பாடு என்பவற்றை விரும்பாமையும் ஜனநாயக தன்மையினை அதிகம் நாடுகின்ற மனப்பான்மை, மாணவர்கள் பாராட்டு, வெகுமதிகள், சிறந்த இடைத் தொடர்பு என்பவற்றை ஆசிரியர்களிடமிருந்து எதிர்பார்த்தல், சிறந்த பௌதிகச் சூழல், செயற்பாட்டுடனான கற்றல் என்பவற்றில் ஆரோக்கியமின்மை வகுப்பறை சார் ஆவணங்களை ஆசிரியர்கள் பேணுவதில் சோம்பல் உணர்வு, உள்ளக. வெளியக மேற்பார்வையில் ஆசிரியர்களது செயற்பாடுகள் திருப்தியற்ற தன்மை என்பன வகுப்பறை முகாமையைப் பாதிக்கின்ற அதேவேளை மாணவர் கற்றல் பாதிப்பிலும் செல்வாக்குச் செலுத்துகின்றமையை கருதமுடிகின்றது. இது தொடர்பாக ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வுக் கருத்தரங்குகள், வளப் பயன்பாட்டு செயலமர்வுகள் பற்றிய அறிவுறுத்தல் மற்றும் மாணவர் மதிப்பீடு தொடர்பான விடயங்கள் விதப்புரைகளாக இவ்வாய்வினூடாக முன்வைக்கப்படுகின்றது. |
en_US |