dc.contributor.author |
நமசிவாயம், முத்துலிங்கம் |
|
dc.date.accessioned |
2024-03-18T04:31:08Z |
|
dc.date.available |
2024-03-18T04:31:08Z |
|
dc.date.issued |
2023 |
|
dc.identifier.citation |
MED354 |
en_US |
dc.identifier.uri |
http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15178 |
|
dc.description.abstract |
"சாதாரனா வகுப்பறையில் கல்வி பயிலும் விசேட தேவையுடைய மாணவர்கள் கற்றலில் எதிர்நோக்கும் சவால்கள்" (மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் சாதாரண வகுப்பறைகளில் கல்வி கற்கும் விசேட தேவையுடைய மாணவர்கள் கற்றல் தொடர்பாக பல்வேறு பிரச்சிவைகளை எதிர்கொள்கின்றனர். இங்கு விசேட தேவையுடைய மாணவர்களின் அடைவு மட்டம் சாதாரண மாணவர்களின் அடைவு மட்டத்தோடு ஒப்பிடும் போது மிக குறைவானதாக காணப்படுகின்றது. குறிப்பாக விசேட தேவையுடையோருக்கான கற்றல் சாதனங்கள் இன்மையானது பாரிய குறையாடாக காணப்படுகின்றது. பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் இல்லாமை இங்கு காணப்படுகின்ற பிரச்சினைகளில் ஒன்றாக காணப்படுகின்றன. உதாரணமாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் கற்பிக்கின்ற மொத்த ஆசிரியர்களில் ஒரு ஆசிரியா மட்டுமே விசேட கல்வி டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்தவாராக காணப்படுகின்றார். இத்தகைய நிலையானது விசேட கல்வியில் புலமையற்ற ஆசிரியர்களால் எவ்வாறு விசேட கல்வியை வழங்க முடியும் என்ற பிரச்சினையை தோற்றுவித்துள்ளது. எனவே "சாதாரண வகுப்பறையில் விசேட தேவையுடைய மாணவர்கள் எதிர் நோக்கும் சவால்களை இனங்கண்டு அவற்றை குறைத்து கொள்வதற்கான பரிந்துரைகளை முன்வைத்தல்" எனும் நோக்கத்தின் அடிப்படையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இவ்வாய்வானது மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தை ஆய்வு பிரதேசமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் விசேட தேவையுடைய மாணவர்கள் அதிகமாக கல்வி கற்கின்ற பத்து பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு பத்து பாடசாலைகளில் இருந்தும் ஆய்வின் நோக்கத்திற்கு ஏற்ப நோக்க மாதிரி இலகு எழுமாற்று மாதிரி தெரிவிற்கு ஏற்ப ஐம்பது விசேட தேவையுடைய மாணவர்களும் ஐம்பது விசேட தேவையுடைய மாணவர்களின் பெற்றோரும் இருபது ஆசிரியர்களும் பத்து பாடசாலைகளின் அதிபர்களும் மாதிரியாக தெரிவு செய்யப்பட்டு ஆய்வு இடம்பெற்றுள்ளது. பெறப்பட்ட மாதிரிகளில் இருந்து தகவல்கள் பெறும் பொருட்டு நேர்காணல்,வினாக்கொத்து முறை, அவதானம், ஆவணங்கள் போன்ற ஆய்வுக்கருவிகள் மூலமாக தகவல்கள் பெறப்பட்டுள்ளன. பெறப்பட்ட தரவுகள் பகுப்பாவிற்கு உட்படுத்தப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளன. பெற்பட்ட முடிவுகளுக்கு ஏற்ப அத்தியாயம் ஐந்தில் விதந்துரைபுக்களும் முடிவுகளும் முன்வைக்கப்பட்டு ஆய்வு முழுமை பெற்றுள்ளது. |
en_US |
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka |
en_US |
dc.subject |
சாதாரண வகுப்பறை |
en_US |
dc.subject |
விசேட தேவையுடைய மாணவர்கள் |
en_US |
dc.subject |
கற்றல் எதிர்நோக்கும் சவால்கள் |
en_US |
dc.title |
சாதாரண வகுப்பறையில் கல்வி பயிலும் விசேட தேவையுடைய மாணவர்கள் கற்றலில் எதிர்நோக்கும் சவால்கள் |
en_US |
dc.type |
Thesis |
en_US |