dc.description.abstract |
தற்கால வேலை உலகிற்கு தேவையான அறிமுறை, செயன்முறை திறள் கொண்ட தொழிற்படையை உருவாக்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்ட இலங்கையின் பொதுக்கல்வியில் தற்போது நடைமுறையிலுள்ள க.பொ.த. உயர்தர தொழினுட்பப் துறையின் செயன்முறையினுடாக மாணவர்களின் வினைத்திறனான கற்றலையும் உயர்ந்த பெறுபேற்றினை அடையும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள இவ்வாய்வு மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலய க.பொ.த. உயர்தர தொழிநுட்ப பிரிவு உள்ள பாடசாலைகளின் க.பொ.த உயர்தர தொழிநுட்ப பாட அடைவில் தழம்பல் நிலை காணப்படுகின்றது இந் நிலைக்கு செல்வாக்கு செலுத்தும் பல்வேறுபட்ட காரணிகள் காணப்பட்டபோதிலும் அவற்றுள் க.பொ.த உயர்தர தொழிநுட்ப பாட சித்தியில் 30 வீதமான புள்ளிகளுக்கு காரணமாக அமையும் செயன்முறை பரீட்சையும் ஒன்றாகும். எனவே இச் செயன்முறைபரீட்சைக்கான கற்பித்தலில் உள்ள இடர்பாடுகளை கண்டறிவதே இவ் ஆய்வின் நோக்கமாகும். இவ்வாய்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலயங்களின் தெரிவுசெய்யப்பட் மூன்று கல்விக் கோட்டங்கங்களை உள்ளடக்கிய தொழினுட்ப பாடத்துறையுள்ள, தொழினுட்ப பீடங்கள் உள்ள 04 பாடசாலைகளும் தொழினுட்ப பீடங்கள் அற்ற 04 பாடசாலைகள் ஆய்வு மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், இப் பாடசாலைகளின் 08 அதிபர்களும், 08 பொறியியல் தொழினுட்பப் பாடத்துறை ஆசிரியர்களும். 294 பொறியியல் தொழினுட்பப் பாடத்துறை மாணவர்களுள் 165 பேரும் ஆய்வுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆய்வு கருவிகளாக வினாக்கொத்து, நேர்காணல் என்பவற்றின்மூலம் பெறப்பட்ட அளவுரீதியானதும் பண்புரீதியானதுமான தரவுகள் கலப்பு முறையில் வகுப்பாக்கம், அட்டவணையாக்கம் மற்றும் சதவீதமாக்கல் என்பவற்றினுடாக பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பெறப்பட்ட முடிவுகளாக, பொறியியல் தொழினுட்பப் பாடத்துறை அடைவின் வீழ்ச்சிக்கு 30 வீத புள்ளிகளில் செல்வாக்குச் செலுத்தும் செயன்முறைகள் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தும் தன்மை குறைவாகக் காணப்படுதல், தொழிநுட்ப பீடங்கள் இல்லாத சில பாடசாலைகளில் அறிமுறை கற்பித்தல் மாத்திரம் இடம்பெறுநிலையும், படசாலை உள்ளக மேற்பார்வையில் உள்ள குறைபாடுகள், தொழிநுட்ப பீடங்கள் இன்மையால் பெளதீக வளப்பற்றாக்குறை, திறன்விருத்தி செயற்பாடுகளை முழுமையாகப் பூர்த்தி செய்யமுடியாமை, மாற்று ஏற்பாடுகளைச் செய்வதில் தொழிற்பயிற்சி நிறுவனங்களின் ஒத்துழைப்பின்மை செயன்முறைக்கற்பித்தலில் ஆசிரியர் வாண்மைத்துவம் போதாமை, போன்ற முடிவு கிடைக்கப்பெற்றன தொழிநுட்பபீடம் இல்லாத பாடசாலைகள் பீடம் உள்ள பாடசாலைகளுடன் இணைத்தல், தொழிநுட்ப பாடமுள்ள பாடசாலைகள் ஒருங்கினைத்தல் போன்ற, உள்ளக,வெளிவாரியான மதிப்பீடுகளை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தல், ஆசிரிய வாண்மை விருத்திக்கான செயலெழுங்குகனை பரிந்துரைத்தல் போன்ற பல விடயங்கள் இவ்வாய்வினுாடாக முன்வைக்கப்படுகின்றது |
en_US |