dc.description.abstract |
ஆரம்பபிரிவு வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் சிறப்பான முறையில் அமைவதற்கும் அதன் மூலமாக பாடசாலைகளில் உருவாக்கப்படும் செயமிமுறைகள் சிறந்த விளைதிறனை உருவாக்குவதற்கும் பொருத்தமான சுற்றல் துணைச்சாதனங்களின் பயன்பாடுகள் இன்றியமையாதவையாக காணப்படுகின்றன. இதன் மூலம்தான் ஒரு பாடசாலையினுடைய வினைத்திறனை (Efficiency) அதிகரிப்பதுடன் விளை (Effectiviness) அதிகரித்து இவை இரண்டின் விளைவாக உற்பத்தித்திறன் (Productivity) அதிகப்படுத்தக் கூடியதாக இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதன்படி ஆய்லானது ஆரம்ப பிரிவு ஆசிரியர்களின் கற்பித்தல் செயற்பாடுகளில் துணைச்சாதனங்களின் செல்வாக்கினைக் கண்டறிந்து அவை வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டினை விருத்தி செய்வதில் உள்ள தடைகளைக் கண்டறிந்து அதனைச் சுட்டிக்காட்டுவதை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாய்விற்காக ஆய்வு மாதிரிகளாக அதிபர் ஆசிரியர்கள் ஆசிரிய ஆலோசகர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இக் கோட்டத்திலுள்ள 10 பாடசாலைகளில் 09 பாடசாலைகள் ஆரம்பபிரிவு பாடசாலைகளாக காணப்படுவதனால் இவ்வாய்விற்கென 09 பாடசாலைகளும் நோக்கமாதிரித் தெரிவின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளன. பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டமைக்கு அமைவாக அதிபர்களும் தெரிவு செய்யப்பட்டனர். இப்பாடசாலைகளில் 54 ஆரம்பபிரிவு ஆசிரியர்கள் கற்பிக்கின்றன. இப்பாடசாலைகளில் கற்பிக்கும் அனைத்து ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களும் நோக்கமாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர். அத்தோடு ஆரம்ப பிரிவு ஆசிரிய ஆலோசகர் ஒருவரும் நோக்க மாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டார். ஆய்விற்கான தரவுசேகரித்தல் கருவிகளாக வினாக்கொத்து, அவதானம், நேர்காணல் ஆகியன பயன்படுத்தப்பட்டன. இவற்றின் மூலமாகப் பெறப்பட்ட தரவுகள் அளவுசார் மற்றும் பண்புசார் தரவுகள்(கலப்பாய்வுமுறையில்) பகுப்பாய்வு செய்யப்பட்டு வியாக்கியானம், கலந்துரையாடல் விதப்புரைகள் போன்ற செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன. அத்தோடு ஆய்வு முடிவுகள் பொருத்தமான மென்பொருள் முறைகளினூடாக வகுப்பாக்கம், அட்டவணையாக்கம், சலாகைவரைபு, வட்டவரைபு, முப்பரிமாண வரைபடங்கள் மூலமாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. தரவுகளின் பகுப்பாய்வின் மூலமாக கற்பித்தல் துணைச்சாதனங்களின் பயன்பாடு குறைவாகக் காணப்படுகின்றமை. புலன்களை முதன்மைப்படுத்திய வகையில் கற்பித்தல் துணைச்சாதனங்கள் குறைவாகக் காணப்படுகின்றமை, மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் ஆர்வமற்றவர்களாகக் காணப்படுகின்றமை போன்றவற்றை அவதாளிக்கக் கூடியதாக இருந்ததுடன், மாணவர்களிடையே அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றில் விருத்தியேற்படத நிலைமையை இனங்காண கூடியதாக இருந்தது. இந்நிலைமைகள் வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டினை விருத்தி செய்வதில் உள்ள தடைகளுக்கு காரணிகளாகின்றன. இத்தகைய முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய விதப்புரைகளும் இவ்வாய்வினூடாக முன்வைக்கப்பட்டுள்ளன |
en_US |