dc.description.abstract |
COVID-19 இடர்காலத்தின் பின் இலங்கையை பொறுத்தவரையில் பல துறைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டவண்ணம் காணப்படுகிறது. இதற்கிணங்க இவ்வாய்வானது COVID 19 இடர்காலத்தின் பின் மாணவர் கற்றலில் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பமானது எவ்வகையான செல்வாக்கைச் செலுத்தி உள்ளது என்பதை இனங்கண்டு கற்றலில் அவற்றைப் பயன்படுத்துவதன் சாதகபாதகங்களை பரிந்துரை செய்தலைநோக்கமாகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது. மண்முனைவடக்கு கோட்ட பாடசாலை மாணவர்களின் Covid 19 பின் அதிகரித்த தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பிரயோகங்கள் உடல் 2.611 சமூகரீதியில் பாதிப்பை ஏற்படுத்துவதாக காணப்பட்டமையை ஆய்வுபிரச்சினையாகக் கொண்டு இவ்வாய்வானது மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைவடக்கு கல்வி வலயத்தின் 08 1AB பாடசாலைகளை நோக்கமாதிரி அடிப்படையில் தெரிவு செய்து முன்னெடுக்கப்பட்டது. அவ் IAB பாடசாலைகளில் கல்வி பயிலும் உயர்தர மாணவர்களில் 200 மாணவர்களும், அவர்களின் உயர்தரம் கற்பிக்கும் ஆசிரியர்கள் 46 பேரும் ஆய்வு மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்டு கல்வி ஆய்வுகளை மேற்கொள்ள சிறந்த முறையான அளவை நிலை ஆய்வின் அடிப்படையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். ஆய்வின் பொது நோக்கம் நான்கு சிறப்பு நோக்கங்களாக்கப்பட்டு அவை ஆய்வு வினாக்களாக மாற்றப்பட்டுள்ளன.ஆய்வுக்கருவிகளாக வினாக்கொத்து, நேர்காணல் என்பவை பயன்படுத்தப்பட்டு மாதிரிகளிடம் இருந்து அளவுரீதியாகவும், பண்புரீதியாகவும் தரவுகள் சேகரிக்கப்பட்டு அவை Excel மென்பொருளியின் ஊடாக பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டு, வியாக்கியானம், கலந்துரையாடல் என்பன செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன. இவ்வாய்வின் கண்டறிதல்களாக COVID 19 இடர்காலத்தின் பின் மாணவர்களிடம் கற்றலிற்கான தகவல்தொடர்பாடல் தொழிநுட்பப்பாவனை மிகையாக அதிகரித்துள்ளது. தகவல்தொடர்பாடல் பிரயோகங்கள் மாணவர்களுக்கு அதிக நன்மைகளையும், சுயகற்றலையும் தூண்டி வினைத்திறனான கற்றலுக்கு வழிகாட்டுகின்றது. மேலும் தகவல்தொடர்பாடல் தொழிநுட்பத்தின் கற்றல் மீதான முறையான பிரயோகம், வழிகாட்டுதல்கள், விழிப்புணர்வுகள் பாடசாலை. வீட்டுச்சூழல்கள் மூலம் வழங்கப்படுவதன் மூலம் கற்றல் அடைவுகள் அதிகரிப்பது மட்டுமல்லாது தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தால் உடல், உள, சமூக கற்றல் ரீதியாக ஏற்படும் எதிர் விளைவுகளையும் இழிவாக்கலாம் என்பன கண்டறியப்பட்டுள்ளன |
en_US |