dc.description.abstract |
இவ் ஆய்வானது உயர்தரவகுப்பு மாணவர்களின் ஒழுக்கவிழுமிய சீரருலைவுகளால் உயர்தரவகுப்பில் கற்பிக்கும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள் என்ற தலைப்பினை அடிப்படையாக திருகோணமலைக் கல்விக்கோட்டம் தெரிவு செய்யப்பட்டு, அவற்றில் தமிழ்மொழி மூலமான தேசிய பாடசாலைகள் நான்கு மாதிரிகளாக ஆய்வாளனால் பெறப்பட்டன. அத்தோடு ஆய்வின் சிறப்பு நோக்கங்களாக க.பொ.த (உ/த) வகுப்பு மாணவர்களின் ஒழுக்கவிழுமிய சீர்கேடுகளை இனங்காணல், ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்களை இனங்காணல், சு.பொத (உ/த) மாணவர்களின் ஒழுக்கவிழுமிய சீர்கேடுகளை குறைப்பதற்காக பாடசாலையால் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஒழுக்க சீர்கேடுகள் கொண்ட க.பொ.த.உயர்தர மாணவர்களின் கற்றலுக்கு பொருத்தமான ஆலோசணைகளை வழங்குதல். இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் மாதிரிகளான ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும் விளாக்கொத்துக்கள் வழங்கப்பட்டன அத்துடன் மாணவர்களிடம் கலந்துரையாடி அவதானிப்பு படிவத்தின் மூலம் தகவல்கள் பெறப்பட்டன. இவ்வாறு பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஒவ்வொரு வகைப்பாடசாலை அதிபரும் ஆய்விற்கு அவசியமாகவுள்ள தனைக் கருத்தில் கொண்டு நோக்கமாதிரியின் அடிப்படையில் 4 அதிபர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். ஆய்விற்காகத் தெரிவுசெய்யப்பட்ட ஆசிரியர்கள் பால் ரீதியாக பல்லினத்தன்மை கொண்டவர்களாகக் காணப்படுவதால் படைகொண்ட மாதிரித்தெரிவின் அடிப்படையில் 63 ஆசிரியர்களையும் 31 எனும் விகிதத்தில் 19 ஆசிரியர்கள் இலகு எழுமாற்று மாதிரியின் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். க.பொ.த(உ/த) மாணவர்கள் மொத்தம் 971 காணப்படுகின்றனர். இவர்கள் பல்லினமாக காணப்படுவதனால் படைகொண்ட இலகு எழுமாற்று மாதிரித்தெரிவின் அடிப்படையில் 10:1 எனும் விகிதத்தில் 91 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். ஆய்வின் மூலம் கண்டுபிடிப்புக்களாக மாணவர்கள் சினிமா மோகத்தினால் மாணவர்களின் சீருடைகள்,சிகை அலங்காரங்கள் மற்றும் பாதணிகள் போன்றவை நேர்த்தியாகக் காணப்படாமை. மாணவர்களின் கையடக்கதொலைபேசிப்பாவனையினால் உடல் நலம் பாதிக்கப்படுதல் மற்றும் சமூகவலைத்தளங்களில் சீர்கெட்ட நடவடிக்கைகள் அதிகரித்தல், வகுப்பறைகற்றல் செயற்பாடுகளில் ஆர்வமின்மையினால் பரீட்சையின் பார்த்தெழுதுதல், மாணவர்களின் வெளிநாட்டு மோகத்தினால் கற்றலில் ஆர்வமின்மை, இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் நவீன மேலைத்தேய ஆடல் பாடல்களை விரும்புதல், போதைப்பொருள் பாவனையினை பயன்படுத்துதல், திருட்டுவேலைகளில் ஈடுபடுதல் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. |
en_US |