Abstract:
ஒரு மனிதனின் வாழ்நாளில் இளம்பராயம் என்பது மிக முக்கியமான பருவமாகும். இக்காலப்பகுதியில் முறையான கட்டமைக்கப்பட்ட வழிகாட்டல்கள் அவசியமாகின்றது. இளம்பராய பிள்ளைகளுக்கு திட்டமிட்ட அடிப்படையில் அறிவை வழங்கும் ஊடகமாக ஆரம்பக்கல்வி காணப்படுகிறது. ஆரம்பக்கல்வியே கற்றலின் அத்திவாரமாக அமைகின்றது. இக்காலப் பகுதியில் பெற்றுக்கொள்ளும் கல்வியானது மாணவர்களின் அடுத்தடுத்த கட்ட கற்றல் நடவடிக்கைகளுக்கும், எதிர்காலத்தில் நற்பண்புள்ள பிரஜையாக வாழ்வதற்கும் துணைபுரிகின்றது. இவ்வாய்வின் பிரதான நோக்கம் ஆரம்பக்கல்வி மாணவர்களின் மகிழ்ச்சிகரமான கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் இணைக்கலைத்திட்டத்தின் நடைமுறைப்படுத்துவதில் கண்டறிந்து பாடசாலைகள் பங்களிப்பினையும் எதிர்கொள்ளும் அவற்றை முன்னேற்றுவதற்கான அதனை சவால்களையும் விதந்துரைப்புகளையும், ஆலோசனைகளையும் முன்மொழிவதாகும். இவ்வாய்வு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பு மத்திய கல்வி வலய காத்தான்குடி கல்வி கோட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு மொத்தமாக 32 பாடசாலைகளில் 28 பாடசாலைகள் ஆரம்பப் பிரிவுகளைக் கொண்டுள்ளன. படையாக்கப்பட்ட இலகு எழுமாற்று மாதிரி நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு 10 ஆரம்பப் பிரிவுகளைக் கொண்ட பாடசாலைகள் ஆய்வுக்காக தெரிவுசெய்யப்பட்டு வினாக்கொத்து, நேர்காணல் அவதானம் மூலமாக பல தரவுகள் பெறப்பட்டு எண் சதவீத அளவீட்டு ரீதியிலும் ஆய்வு நோக்கத்தின் அடிப்படையில் பண்பு ரீதியாகவும், பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் எடுத்துரைக்கப்பட்டடுள்ளன. ஆய்வு முடிவுகளில் இருந்து மகிழ்ச்சிகரமான கற்றலில் இணைக்கலைத்திட்டத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படாமை. இணைக்கலைத்திட்டம் தொடர்பாக பெற்றோர்களுக்கு போதிய விளக்கமின்மை, வளங்களின் பற்றாக்குறை, அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சார்பான குறைபாடுகள்.வகுப்பறைகள் மகிழ்ச்சியான கற்றலுக்கு ஏற்ற வகையில் இல்லாமை, போன்ற முடிவுகள் கண்டறியப்பட்டு அதற்கான விதப்புரைகளாக ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான கற்றலை மேற்கொள்ளும் வகையில் அதிகரித்தல், இச்செயற்பாடுகளில் இணைக்கலைத்திட்டத்திற்கான கற்பித்தலை வாய்ப்புகளை பாடசாலை சமூகத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளல், ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கு இணைக்கலைத்திட்டத்தை சமநிலையாக அமுல்படுத்தல் தொடர்பான திட்டங்களை வகுத்தல் ஆகிய அம்சங்கள் இவ்வாய்வினூடாக முன்வைக்கப்பட்டன