dc.contributor.author |
ராஜினி, முருகன் |
|
dc.date.accessioned |
2024-03-28T05:12:55Z |
|
dc.date.available |
2024-03-28T05:12:55Z |
|
dc.date.issued |
2023 |
|
dc.identifier.citation |
FAC1121 |
en_US |
dc.identifier.uri |
http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15222 |
|
dc.description.abstract |
மத்திய மலைநாட்டின் தேயிலை மற்றும் இயற்கை அழகானது சுற்றுலாப்பயணிகளை பெரிதும் கவர்வனவாகவுள்ளது. நுவரெலியா மாவட்டத்திலுள்ள அம்பகமுவ பிரதேமும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. சுற்றுலாவின் ஒரு பகுதியாக தேயிலைசார் சுற்றுலா மேற்கொள்ளப்படுகின்றது. தேயிலை சுற்றுலா நடவடிக்கைகளில் ஈடுபட சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் இலங்கை தேயிலை தோட்டங்கள் நிலப்பரப்பு மற்றும் வசதியான காலநிலையுடன் தனித்துவமான இயற்கை அழகைக் கொண்டுள்ளன. இதற்கமைவாக "தேயிலைசார் சுற்றுலா விருத்திக்கான சாத்தியக் கூறுகள்: அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவை மையப்படுத்திய ஓர் ஆய்வு" எனும் தலைப்பில் இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அம்பகமுவ பிரதேச செயலகப் பகுதியில் தேயிலைசார் சுற்றுலாவை விருத்தி செய்வதற்கான வாய்ப்புக்களை கண்டறிதல் இவ்வாய்வின் பிரதான நோக்கமாக உள்ளது. இவ்வாய்விற்கு வினாக்கொத்து, நேர்காணல், நேரடி அவதானிப்பு ஆகியவற்றினூடாக முதலாம் நிலைத் தரவுகளும் மற்றும் இரண்டாம் நிலைத்தரவுகளும் பெறப்பட்டுள்ளது. ஆய்வுப் பிரதேசத்திலுள்ள ஏழு தேயிலைத்தோட்டங்களில் வருகைதந்த சுற்றுலாப் பயணிகளில் இருந்து 3 சதவீத அடிப்படையில் 114 வினாக்கொத்துக்கள் வழங்கப்பட்டு தரவுகள் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு பெறப்பட்ட தரவுகள் Excel மென்பொதியூடாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளதுடன் Arc GIS, Google earth என்பவற்றின் ஊடாக சுற்றுலாத் தளங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் SWOT பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு தேயிலைசார் சுற்றுலாவிற்கான சாத்தியக் கூறுகள் அடையாளப்படுத்தப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. அத்துடன் தேயிலைசார் சுற்றுலாவுடன் இணைந்த வகையில் சுற்றுலாவில் ஈடுபடக்கூடிய இடங்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வின் மூலம் 40 சதவீதமான சுற்றுலாப் பயணிகள் தேயிலையுடன் தொடர்பான விடயங்களில் ஈடுபடுவதற்காக ஆய்வுப் பிரதேசத்தில் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளனர் என்பதனையும் அறிய முடிந்தது. மேலும் தேயிலைசார் சுற்றுலாவினை விருத்தி செய்வதற்கான உபாயங்கள் தொடர்பாகவும் ஆலோசனைகள் இவ்வாய்வில் முன்வைக்கப்பட்டுள்ளன |
en_US |
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka |
en_US |
dc.subject |
தேயிலைசார் சுற்றுலா |
en_US |
dc.subject |
சாத்தியக் கூறுகள் |
en_US |
dc.subject |
தேயிலைத் தோட்டங்கள் |
en_US |
dc.subject |
சுற்றுலாப் பயணிகள் |
en_US |
dc.subject |
சுற்றுலா விருத்தி |
en_US |
dc.title |
தேயிலைசார் சுற்றுலா விருத்திக்கான சாத்தியக் கூறுகள் : அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவை மையப்படுத்திய ஓர் ஆய்வு |
en_US |
dc.type |
Thesis |
en_US |