dc.description.abstract |
மாடு வளர்ப்பு அதிகமானோரின் வாழ்வாதார தொழிலாக காணப்படுவதோடு அதிக வருவாயையும் ஈட்டிதருகின்ற தொழிலாகவும் தற்காலத்தில் மாறி வருகின்றது. இவ்வாய்வு ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகப் பிரிவில் மாடு வளர்ப்பில் எதிர்நோக்கும் சவால்கள் எனும் தலைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில் இவ்வாய்வின் பிரதான நோக்கமாக ஏறாவூர்ப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவில் மாடு வளர்ப்பின் முக்கியத்துவம் மற்றும் சவால்களை ஆராய்தலினை அடிப்படையாகக் கொண்டு முதலாம் மற்றும் இரண்டாம் நிலை தரவுகளைப் பயன்படுத்தி அளவை ரீதியாகவும்,பண்புரீதியாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அதிகளவு மாடு வளர்ப்பில் ஈடுபடும் ஆறு கிராமம சேவகர் பிரிவில் இருந்து எழுமாற்று மாதிரி நுட்பமுறை பயன்படுத்தி 71 வினாக்கொத்து வழங்கப்பட்டு தரவுகளும் தகவல்களும் பெறப்பட்டன. இதனை விட கலந்துரையாடல், நேரடி அவதானிப்பு, நேர்காணல் மூலமும் தகவல்கள் பெறப்பட்டன. இவ்வாய்வில் மாடு வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்கள் முறையான மேய்ச்சல் இன்மை, மாடுகளுக்கு தேவையான நீர் கிடைப்பனவு குறைவு, உற்பத்திகளை சந்தைப்படுத்தலுக்குரிய வாய்ப்பு குறைவு போன்ற பல சவால்களை எதிர்கொள்கின்றனர். அவற்றை கண்டறிவதற்காக பெறப்பட்ட தரவுகள் Excel மென்பொதியினை பயன்படுத்தி அட்டவணைகளாகவும், வரைபடங்களாகவும், விளக்கப்படங்களாகவும் விளக்கப்பட்டுள்ளது. Arc GIS மென்பொதியினையும் பயன்படுத்தி ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்ட ஆய்வுபிரதேசம் படம் மற்றும் மாடு வளர்ப்பிற்கு ஏற்ற மேய்ச்சல் நிலங்களை அடையாளப்படுத்துடன் மாடு வளர்ப்பிற்குரிய நீர் தேவையினை பூர்த்தி கொள்வதற்குரிய குளங்கள் என்பன படமாக்கப்பட்டுள்ளன. ஆய்வுப்பிரதேசத்தில் 65 பண்ணையாளர்கள் நிரந்தரமான மேய்ச்சல் நிலம் இல்லை என்றும் வளர்க்கப்படும் அதிகளவான மாடுகள் பதிவு செய்யபடவில்லை மாடுகளுக்கான நீரை பெற்றுக்கொள்வதற்கு கட்டமைக்கப்பட்ட குளங்கள், கால்வாய்கள் அபிவிருத்தி செய்யப்படவில்லை, பெரும்பாலும் பண்ணையாளர் திறந்த வெளிகளில் மாடுகளை மேய்யவிடுகின்றமையால் அதிகளவிலான மாடுகளை இழக்கின்ற நிலமை,முறையான சந்தைவாயப்புகளை பெற முடியாத நிலமைகளும் ஆய்வின் ஊடாக வெளிப்படுத்தப்படுகின்றது. அத்துடன் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சனை தொடர்ச்சியாக ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் மாடு வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்கள் பல சவால்களையும் எதிர் நோக்குகின்றனர் அதற்கான தீர்வுகளும் இவ்வாய்வில் முன்வைக்கப்பட்டுள்ளமையால் இப்பிரதேசம் மாடுவளர்ப்பில் தனிச்சிறப்பு வாய்ந்த இடமாக மாற்றியமைக்க முடியும் |
en_US |