dc.description.abstract |
கேகாலை மாவட்டத்தின் புளத்ஹோபிட்டிய பிரதேச செயலகமானது அண்மைக்காலங்களாக வேறுபட்ட வகையிலான இயற்கை அனர்த்தங்களை எதிர்நோக்கி வருகின்றது. இதில் நிலச்சரிவானது ஒவ்வொரு வருடமும் ஏற்பட்டு வரும் பிரதான இயற்கை அனர்த்தமாக உள்ளது. அந்தவகையில் "ஆய்வு பிரதேசத்தில் நிலச்சரிவின் இடரீதியான பரம்பலினை இணங்காணல்" என்ற பிரதான நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு இவ் ஆய்வானது முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆய்வு பிரதேசத்தின் நிலச்சரிவிற்கான காரணிகளை இனங்காணல், நிலச்சரிவிற்கு பின்னரான தாக்கங்களை மதிப்பிடல் மற்றும் நிலச்சரிவு தொடர்பான முகாமைத்துவ நடவடிக்கைகளை ஆராய்தல் போன்ற உப நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இவ் ஆய்வானது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ் ஆய்வானது அளவுசார் மற்றும் பண்புசார் முறையினை அடிப்படையாக கொண்டு கலப்புமுறை ஆய்வாக அமையப்பெற்றுள்ளது. ஆய்வுக்கு தேவையான தரவுகள் முதலாம் நிலைத்தரவு என்ற ரீதியில் நேரடி அவதானிப்பு. வினாக்கொத்து, கலந்துரையாடல், நேர்காணல் என்ற அடிப்படையிலும், இரண்டாம் நிலை மூலகங்களான ஆய்வுப்பிரதேத்தின் 1:50000 என்ற அளவு திட்டத்தில் உருவாக்கப்பட்ட இடர்படம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலைய அறிக்கை,பிரதேச செயலக அறிக்கை, செய்மதி படங்கள் போன்ற மூலங்களிலிருந்து இரண்டாம் நிலைத்தரவுகள் பெறப்பட்டுள்ளது. Ms.Office, Arc GIS போன்ற கணினி மென்பொருட்களும் பயன்படுத்தப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. ஆய்வின் பெறுபேற்றின் அடிப்படையில் ஆய்வு பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பில் 47.07 ஹெக்டயர் பரப்பானது உயர் இடர் பகுதியாகவும், 99.72 ஹெக்டயர் பரப்பானது மிதமான இடர் பகுதியாகவும், 35.55 ஹெக்டயர் குறைவான இடர் பகுதியாகவும், 27.27 ஹெக்டயர் பரப்பு மிக குறைவான இடர் பகுதியாகவும் இனங்காணப்பட்டுள்ளது. ஆய்வு பிரதேசத்தில் நிலச்சரிவை தூண்டும் பிரதான பௌதீக காரணிகளாக, மழைவீழ்ச்சி, மண், பாறை. தரைத்தோற்றம் போன்றன இனங்காணப்பட்டுள்ளதுடன் மானிட நடவடிக்கையாக வேறுபட்ட நிலப்பயன்பாடு, பாறையுடைத்தல், போக்குவரத்து பாதை அமைத்தல் போன்றன இனங்காணப்பட்டு னங்காணப்பட்டுள்ளன. மேலும் உடமை சேதம் மற்றும் உயிரிழப்புக்களும் அதிகமாக இடம்பெற்றுள்ளது. ஆய்வு பிரதேசத்தில் ஆரம்ப காலங்களில் நிலச்சரிவு தொடர்பான முகாமைத்துவ நடவடிக்கை குறைவாக காணப்பட்டதுடன் அவற்றினை சிறப்பாக மேற்கொள்வதற்கான பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தின் பாதிப்புக்களுக்கு சமூக மட்டத்திலான செயற்பாடுகளே அதிகம் செல்வாக்கு செலுத்தியுள்ளமையும் குறிப்பிடதக்கது . |
en_US |