Abstract:
நிலப் பயன்பாடு மாற்றம் என்பது மனிதர்களால் பூமியின் நிலப்பரப்பை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சொல், அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தின் கெஹல் கமு ஓயா வடிநிலப்பிரதேசத்தின் நிலப்பயன்பாட்டு மாற்றம் (2001 மற்றும் 2021) எனும் ஆய்வானது 2001 மற்றும் 2021 வருடங்களுக்கு இடையிலான 20 வருட கால இடைவெளியில் கெஹல்கமுவ ஓயா வடிநிலப்பிரதேசத்திற்கு உட்பட்ட பிரதேசங்களின் நிலப்பயன்பாட்டில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை கண்டறிதல் எனும் நோக்கத்தினைக் கொண்டது. அந்நதவகையில் குறிப்பிட்ட ஆய்வினை மேற்கொள்வதற்கு முதலாம் நிலைத்தரவுகள் நேர்காணல், கலந்துரையாடல் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது. அதனோடு இரண்டாம் நிலைத்தரவுகளாக 2001, 2021 ஆம் ஆண்டுக்கான செய்மதிப்படங்கள், மாவட்ட செயலக புள்ளிவிபரவியல் அறிக்கைகள், வருடாந்த செயலாற்றுகை அறிக்கை, அம்பகமுவ பிரதேச செயலகத்தின் மூலவன திரட்டு 2018 மற்றும் 2021. ஆய்வுடன் தொடர்புடைய சஞ்சிகைகள், நூல்கள் என்பனவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வில் ArcGIS 10.8.2 எனும் மென்பொருளைப்பயன்படுத்தி புவியியல் தகவல் தொழில்நுட்பக் கையாள்கையினோடு இடரீதியான பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு 2001 மற்றும் 2021 ஆண்டிற்கான நிலப்பயன்பாட்டு படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. Google Earth மூலம் குறித்த ஆய்வு பிரதேசத்தின் நிலப்பயன்பாட்டு மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் Supervise Classification முறையினை பயன்படுத்தி பகுப்பாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. படங்களின் தரம் மற்றும் துல்லியத்தன்மை என்பவற்றை வெளிப்படுத்த உண்மை மதிப்பீடானது confusion Metrix முறையினை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவுகள் படி 20 ஆண்டு கால இடைவெளியில் காடுகள் 287.4 ஹெக்டயர்களும் தேயிலையின் நிலப்ரம்பல் 778.9 ஹெக்டயர் என கனிசமான அளவு குறைந்துள்ளது. நீர்நிலைகளும் 816.69 ஹெக்டயர்களாக குறைவடைந்துள்ளது. இவ்வாய்வில் ஏனையவை என்ற வகைப்பாட்டில் உள்ளடங்கும் புல்நிலம், வெற்று நிலம் என்பன 2327.7 ஹெக்டயர் அதிகரித்துள்ளது. அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதே கட்டமைக்கப்பட்ட நிலமும் 20 ஆண்டுகால இடைவெளியில் 679.62 ஹெக்டயர்கள் அதிகரித்துள்ளது