Abstract:
உலகில் காணப்படுகின்ற மிகப் பிரதான பிரச்சினையாக வறுமை அமைந்துள்ளது. அவ்வகையில் மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாய்வின் பிரதான நோக்கம், 'இபலோகம்" பிரதேசத்தின் வறுமை நிலையும், அதில் செல்வாக்கு செலுத்தும் சமூக, பொருளாதார காரணிகளை அடையாளம் காண்பதாகும். இப்பிரதான நோக்கத்துடன் இபலோகம பிரதேசத்தின் வறுமைநிலையை அடையாளம் காணல், வறுமையில் செல்வாக்கு செலுத்தும் சமூகக் காரணிகளை அடையாளம் காணல் மற்றும் பொருளாதாரக் காரணிகளை அடையாளம் காணல் ஆகிய துணை நோக்கங்களும் காணப்படுகின்றன. இபலோகம பிரதேசத்தின் தற்போதைய வறுமை நிலையினை நோக்குகின்றபோது இவ்வாய்வாய்வானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகிறது. ஆய்வின் நோக்கங்களை சிறந்த முறையில் அடைந்து கொள்ளும் முகமாக நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட முறைமைகள் ஆய்வின் போது பயன்படுத்தப்பட்டுள்ளன. அவ்வகையில் ஆய்வு முறையியலாக, ஆய்விற்கான முதலாம் நிலைத் தரவான வினாக் கொத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தெரிவுசெய்யப்பட்ட மாதிரிகளுக்கு வழங்கப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. இவ்வாய்வின் தரவுகள் பண்பு சார்ந்ததும், அளவு சார்ந்ததுமாக காணப்படுவதால் இது கலப்பியல் ஆய்வாகக் கொள்ளப்படுகிறது. ஆய்வு பெறுபேறாக பகுப்பாய்வு முடிவுகளினுாக இபலோகம பிரதேச வாழ் மக்களின் வறுமை நிலையும் அடையாளம் காணப்படுகிறது. ஆய்வு முடிவாக பொருளாதாரக் காரணிகளும், சமூகக் காரணிகளும் வறுமைக்கு காரணமாக அமைகின்றன என்பதும் கண்டறியப்பட்டது. பகுப்பாய்வுகளை மையமாகக் கொண்டு நோக்குகின்றபோது மக்களின் வறுமை ஒழிப்பு முயற்சிகளில் அரசின் பங்களிப்பு இன்னும் அதிகரிக்கப்படுமாயின் மக்களுக்கும் பயனுடையதாக அமையப் பெறும், வறுமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மக்களும், அரசும் ஒத்துழைத்து செயற்படுவது மிகவும் பயனுடையதாக அமையும்