dc.description.abstract |
மாத்தளை மாவட்டத்தின் இரத்தோட்ட பிரதேச செயலகத்திற்குட்பட்ட டெலிவல ஓயா வடிநிலப்பகுதியானது செறிவான தீர்வளம் மிக்க பகுதியாக காணப்பட்டாலும், அண்மைக்காலமாக நீர்வளம் சார்ந்த பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருவகின்றன. இதனால் வடிநில பிரதேச மக்கள் தொடர்ச்சியாக சமூக, பொருளாதார ரீதியான சவால்களுக்கு முகங்கொடுத்து வருவதால் இவ்வாறான பிரச்சினைகளிலிருந்து விடுபட ஒருங்கிணைந்த நீர்வள முகாமைத்துவத்தின் தேவை அவசியமாக உள்ளது. அந்தவகையில் இவ்வாய்வின் பிரதான நோக்கமாக அமைவது டெலிவல ஓயா வடிநிலப்பிரதேசத்தில் IWRM பிரயோகம் தொடர்பாக ஆராய்வதாகும். இதனடிப்படையில் ஆய்விலே வடிநிலப்பிரதேச நீர்வளங்களின் இடரீதியான பரம்பல மற்றும் இப்பரம்பலில் தாக்கம் செலுத்தும் காரணிகள் தொடர்பாகவும், ஆய்வுப்பிரதேச நீரின் தரம் தொடர்பாகவும், நீர்வளப்பயளாளர்கள் தொடர்பாகவும், இவ்வாறான நீர்வளம் சார்ந்து ஆய்வுப்பிரதேசத்தில் காணப்படக்கூடிய சவால்களையும், இனங்கண்டு கொள்வதோடு இவ்வடிநிலப்பிரதேசத்திலே, நீர்வள முகாமைத்துவம் சார்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பாகவும், இத்திட்டங்களினூடாக பயன்பெறும் பயனர்குழு தொடர்பாகவும் (WRM ஊடாக ஆராயப்படுகின்றது. ஆய்வின் நோக்கத்தை அடைவதற்காக முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலைத்தரவுகள் சேகரிக்கப்பட்டன. இவ்வாய்வானது அளவு ரீதியானதும். பண்பு ரீதியானதுமான முறையியலையும் உள்ளடக்கிய கலப்பு முறையிலான ஆய்வாக உள்ளது. வடிநிலப்பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் வாழும் குடும்பங்கள் எழுமாற்று மாதிரிகளின் மூலமாக தெரிவு செய்யப்பட்டு, விளாக்கொத்து பகிர்ந்தளிக்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட தரவுகள் அளவுசார். பண்புசார் முறையியலை பயன்படுத்திப பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. ஆய்வு பிரதேசத்தின் தரைத்தோற்றம், காலநிலை போன்றவற்றின் செல்வாக்கினால் நீர்வளம் செறிவாக கானாப்படுவதோடு, இவ்வளமானது வடிநிலப்பிரதேசத்தில் வேறுப்பட்ட பல தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் வரையறுக்கப்பட்ட இவ்வளத்திற்கு வடிநிலப்பிரதேச தேவைகளுக்கு ஏற்ப பல சவால்கள் தோன்றியுள்ளன. இதனால் பிரதேச மக்களும் பல சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இவ்வாறான சவால்களை ஈடு செய்யும் வகையில் பல்வேறு நிறுவனங்கள், மற்றும் சட்டங்கள் பல முகாமைத்துவ நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றன. இருப்பினும் இவை மக்களின் பிரச்சினைகளை ஈடு செய்வதாக இல்லை, எனவே, வடிநிலப்பிரதேசத்திலே, ஒருங்கிணைந்த நீர்வள முகாமைத்துவ பிரயோகம் மேலும் விருத்தி செய்யப்பட வேண்டியது அவசியமாகும் |
en_US |